Published : 10 May 2020 01:44 PM
Last Updated : 10 May 2020 01:44 PM
'வாத்தி கம்மிங்' பாடலுக்கு வெளிநாட்டினர் நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'வாத்தி கமிங்', 'வாத்தி ரெய்டு', 'குட்டி ஸ்டோரி' உள்ளிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பல்வேறு சமூக வலைதளங்களில் இந்தப் பாடல்களுக்கு நடனமாடி பலரும் பதிவேற்றியுள்ளனர். மேலும், டிக் டாக் செயலியில் மட்டும் 'மாஸ்டர்' பாடல்களுக்கு நடனமாடி பலரும் பதிவேற்றினர். இதில் மட்டும் 1.5 பில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது 'மாஸ்டர்' பாடல்களின் டிக்-டாக் வீடியோக்கள். இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதனிடையே, தற்போது இங்கிலாந்து நாட்டில் வெளிநாட்டினர் பலரும் சமூக இடைவெளியுடன் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடியுள்ளனர். முதலில் சிலர் நடனமாட, பின்பு ஒவ்வொருவராக இணைந்துள்ளனர். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலானது.
உடனடியாக 'மாஸ்டர்' பாடல்கள் உரிமையை வைத்துள்ள சோனி நிறுவனம் இதனை தங்களது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து "உலக அளவில் 'மாஸ்டர்' பாடல்கள் பலருடைய இதயங்களை வென்றுள்ளது" என்று தெரிவித்துள்ளது. இந்த வீடியோவை இசையமைப்பாளர் அனிருத்தும் தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.
இன்னும் 'மாஸ்டர்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் சுமார் 20 நாட்கள் பாக்கியுள்ளது. நாளை (மே 11) முதல் தமிழக அரசு இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளதால், 'மாஸ்டர்' படத்தின் பணிகளைத் தொடங்கி முடித்து, முதல் பிரதியைத் தயார் செய்வார்கள் எனத் தெரிகிறது.
#VaathiComing following #SocialDistancing pic.twitter.com/KuQDhPd8nz
— Anirudh Ravichander (@anirudhofficial) May 9, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT