Published : 15 Apr 2020 10:05 PM
Last Updated : 15 Apr 2020 10:05 PM
வைரஸாய் வந்தே நீ; பாடம் புகட்டி விட்டாய் என்று பாடல் பாடும் வடிவேலு வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்காக மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஊரடங்கால் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. பொதுமக்களும் அத்தியாவசிய தேவைகளைத் தாண்டி வேறு எதற்கும் வெளியே வரவில்லை.
இதனால் இயற்கை வளங்கள் அனைத்துமே மிகவும் சுத்தமாகி உள்ளதாகவும், காற்றின் மாசும் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சில மாவட்டங்களில் விலங்குகள் ஜாலியாக ஊருக்குள் சுற்றிவரும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வெளியாகின. இந்த ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது இது தொடர்பாக வடிவேலுவும் பாடல் பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பாடியிருக்கும் வரிகள்:
காடுகளை அழித்தோம்
மண் வளம் கெடுத்தோம்
நீர்வளம் ஒழித்தோம்
நம் வாழ்க்கை தொலைத்தோம்
வைரஸாய் வந்தே நீ
பாடம் புகட்டி விட்டாய்
இயற்கையை மதிக்கின்றோம்
இத்தோடு விட்டுவிடு
இவ்வாறு வடிவேலு பாடியுள்ளார்.
முன்னதாக, கரோனா வைரஸ் விழிப்புணர்வு வீடியோவில் கண்ணீர் மல்க அவர் வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவை வெல்வோம் pic.twitter.com/rD486Yek42
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT