Published : 12 Apr 2020 09:56 PM
Last Updated : 12 Apr 2020 09:56 PM
பிரதமர் மோடியை நேரில் சந்திக்காமல், கமல் கடிதம் எழுதியது ஏன் என்று ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறார்கள். மேலும், 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது.
இதனிடையே கரோனா ஊரடங்கு குறித்து பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடும் காட்டமாகக் கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதம் மிக நீளமானது. அதில் பண மதிப்பிழப்பு எப்படித் திட்டமிடப்படாமல் நடத்தப்பட்டதோ, அதேபோல் ஊரடங்கும் சரியாகத் திட்டமிடப்படவில்லை. அடித்தட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை போன்ற பல விஷயங்களைச் சுட்டிக்காட்டிய அந்தக் கடிதத்தை கமல் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டார்.
இந்தக் கடிதம் இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. முதன்முறையாக ஒருவர் மிகத் தெளிவாகத் தனது தரப்பு கருத்துகளை எடுத்துரைத்துள்ளார் எனப் பலரும் தெரிவித்தனர். சிலர் ஏன் இதை நேரடியாகச் சொல்லலாமே என்று விமர்சிக்கவும் செய்திருந்தனர்.
தற்போது கமல் கடிதம் எழுதியது ஏன் என்று ஸ்ரீப்ரியா ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக தனது ட்வீட்டில் "ஏன் கடிதம் எழுதுகிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு, என்ன செய்வது? நேரே சென்று மனுக்கள் கொடுக்க முடியாது, பொதுக்கூட்டங்கள் போட்டு மக்களுக்கு நிலைமையை எடுத்துக்கூற இயலாது. அப்புறம்? சமூக ஊடகம், தொலைப்பேசி, கடிதம். தகவல் போய்ச்சேர வேண்டுமே... சரிதானே?" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏன் கடிதம் எழுதுகிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு...என்ன செய்வது ? நேரே சென்று மனுக்கள் கொடுக்க முடியாது,பொதுக்கூட்டங்கள் போட்டு மக்களுக்கு நிலமையை எடுத்துக்கூற இயலாது,அப்புறம்?social media,தொலைப்பேசி ,கடிதம்...தகவல் போய்சேர வேண்டுமே.. .சரிதானே?
— sripriya (@sripriya) April 12, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT