Published : 29 Mar 2020 03:00 PM
Last Updated : 29 Mar 2020 03:00 PM
இது எந்த வகையான கேர் என்று பிஎம் கேர்ஸ் நிதியை (PM CARES Fund) சாடியிருக்கிறார் 'மான்ஸ்டர்' படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்.
கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது. 26 பேர் உயிரிழந்துள்ளனர். 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருப்பதால், இந்தியா முழுவதும் அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை.
இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான செலவுகள் என பல்வேறு சிக்கல்களில் தற்போது இந்தியா சிக்கியுள்ளது. இதனைச் சமாளிக்க PM CARES Fund-க்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடி தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மூலமாக வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு தொழிலதிபர்கள், திரையுலகப் பிரபலங்கள் என நிதியுதவி அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிஎம் கேர்ஸ் நிதியை (PM CARES Fund) சாடியிருக்கிறார் 'மான்ஸ்டர்' படத்தின் இயக்குநர் நெல்சன். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில், "பிரதமர் நிதி ஏன் #PMCARES என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. குடிமக்களை பாரத்தைச் சுமக்கச் சொல்லிவிட்டு யெஸ் வங்கி போன்றவர்கள் எளிதாகத் தப்பிக்க விடவில்லையா? இதில் கேர் எங்கிருந்து வந்தது? குடிமக்களின் பங்களிப்பு எப்படி #pmcares ஆக முடியும்? இது எந்த வகையான கேர்?" என்று கேட்டுள்ளார் நெல்சன் வெங்கடேசன்.
#PrimeMinisterReliefFund why it has to be marketed as #PMCARES ? Isn't he asking his citizens to bear the burden and let people like #yesbank slip away easily ?Where is the ' care ' here ? How can a citizen's contribution becomes #pmcares'. wat kind of care s this ? Shameless !
— Nelson Venkatesan (@nelsonvenkat) March 28, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT