Published : 26 Mar 2020 09:37 PM
Last Updated : 26 Mar 2020 09:37 PM

அசால்ட்டாக இருக்காதீர்கள்; தயவு பண்ணி வெளியே வராதீர்கள்: வடிவேலு கண்ணீர் மல்க வேண்டுகோள்

அசால்ட்டாக இருக்காதீர்கள்; தயவு பண்ணி வெளியே வராதீர்கள் என்று வடிவேலு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 719 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

தற்போது வடிவேலுவும் கண்ணீர் மல்க பேசி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது:

"மனசு வேதனையோடு, ரொம்ப துக்கத்தோடு சொல்றேன். தயவு பண்ணி எல்லாரும் அரசாங்கம் சொல்ற அந்த அறிவுரைப்படி, இன்னும் கொஞ்ச நாளைக்கு வீட்டில் இருங்கள். மருத்துவ உலகமே இன்றைக்கு மிரண்டு போய் கிடக்கிறது. தன் உயிரைப் பணயம் வைத்து பலரையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

காவல்துறையினர் நம்மைக் காவல் காத்து ”பாதுகாப்பாக இருங்கள், தயவு பண்ணி வெளியே வராதீர்கள்” என்று கூப்பிடும் அளவுக்கு இருக்கிறது. யாருக்காகவோ இல்லையோ நம்ம சந்ததியினருக்காக, நம்ம வம்சாவளிக்காக, நம்ம உயிரைக் காப்பாற்றுவதற்காக நாம் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும். தயவு பண்ணி யாரும் வெளியே போகாதீர்கள். அசால்ட்டாக இருக்காதீர்கள். ரொம்ப பயங்கரமாக இருக்கிறது. தயவு பண்ணி வெளியே வராதீர்கள்”

இவ்வாறு வடிவேலு கண்ணீர் மல்கப் பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x