Published : 19 Mar 2020 12:55 PM
Last Updated : 19 Mar 2020 12:55 PM

அசோக் செல்வனின் அடுத்த படம்

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஓ மை கடவுளே'. ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்துக்குப் பிறகு அசோக் செல்வனின் அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகும் புதிய படமொன்றில் நடித்து வருகிறார் அசோக் செல்வன். இதற்காக உடல் எடையை அதிகரித்து நடித்துள்ளார். 'ஃபேட் செஃப்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நித்யா மேனன் மற்றும் ரீத்து வர்மா இருவரும் நாயகிகளாக நடித்து வருகிறார்கள்.

மலையாளத் திரையுலகில் பிரபலமான இயக்குநர் ஐவி சசியின் மகன் அனி சசி இந்தப் படத்தினை இயக்கி வருகிறார். இதன் பெரும்பாலான காட்சிகள் இங்கிலாந்தில் படமாக்கப்பட்டுள்ளன. இப்படத்தில் திவாகர் மணி ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x