Published : 05 Mar 2020 07:44 PM
Last Updated : 05 Mar 2020 07:44 PM
'திரெளபதி' படத்தின் வசூல் நிலவரம் குறித்துப் படத்தின் இயக்குநர் மோகன்.ஜி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிப்ரவரி 28-ம் தேதி மோகன்.ஜி இயக்கத்தில் வெளியான படம் 'திரெளபதி'. ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ட்ரெய்லர் மூலமாகவே இந்தப் படத்தின் சர்ச்சையும், எதிர்பார்ப்பும் ஒரே சேர அமைந்தது. அரசியல் ரீதியாகவும் இந்தப் படத்துக்குச் சர்ச்சையும், ஆதரவும் கிடைத்தது.
கூட்டு நிதி (Crowd Funding) முறையில் மக்களிடம் பணம் வசூலித்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி, ஷீலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் வெளியாகி விமர்சன ரீதியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், வசூல் ரீதியில் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
முதல் வாரத்தில் மட்டும் சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்ததாகத் தகவல் வெளியானது. தற்போது 2-ம் வாரத்தில் நுழைந்துள்ள இந்தப் படம் எத்தனை திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது, எவ்வளவு வசூல் என்பதை இயக்குநர் மோகன்.ஜி தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
'திரெளபதி' வசூல் தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில், "300 திரையரங்குகளில் இரண்டாவது வாரம் தொடர்கிறது. இதுவரை 10 கோடி ரூபாய்க்கு மேல் மொத்தமாக வசூல் சாதனை புரிந்துள்ளது. சிறு குழு கொண்ட தமிழின் முதல் கூட்டு முயற்சி திரைப்படத்தை இவ்வளவு பெரிய அளவில் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
300 திரையரங்குகளில் இரண்டாவது வாரம் தொடர்கிறது... இதுவரை 10 கோடிக்கு மேல் மொத்தமாக வசூல் சாதனை புரிந்துள்ளது.. சிறு குழு கொண்ட தமிழின் முதல் கூட்டு முயற்சி திரைப்படத்தை இவ்வளவு பெரிய வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி.. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.. #திரெளபதி #Draupathi pic.twitter.com/urg94v1InG
— Mohan G (@mohandreamer) March 5, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT