Published : 04 Mar 2020 12:30 PM
Last Updated : 04 Mar 2020 12:30 PM
இயக்குநர் ஆர்.கண்ணன், தானே எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் 'பிஸ்கோத்'. இதில் நாயகன் சந்தானம் ஒரு கதாபாத்திரத்துக்கு மட்டும் கமல் பாணியைப் பின்பற்றுகிறார்.
கண்ணன் இயக்கத்தில் 'ஜெயம் கொண்டான்' மற்றும் 'கண்டேன் காதலை' உள்ளிட்ட படங்களில் சந்தானம் நடித்திருந்தார். ஆனால், அவரை கதாநாயகனாக வைத்து இயக்குவது இதுதான் முதல் படம். பிஸ்கட் கம்பெனியில் சாதாரணமாகப் பணியாற்றுபவன் எப்படி உயர் பதவிக்குச் செல்கிறான் என்பதே இப்படத்தின் கதை.
'சௌகார்' ஜானகி சந்தானத்தின் பாட்டியாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 400-வது படம்.
இப்படத்தில் சந்தானத்திற்கு மூன்று வேடங்கள் உள்ளன. அதில் ஒன்று 'சகலகலா வல்லவன்' படத்தில் கமல் போல வேடம் அணிந்து இருப்பார். அந்த வேடத்தில் அந்தக் காலப் பாணியில் ஒரு சண்டைக் காட்சியும் இருக்கிறது. அதேபோல், ஹைதராபாத்தில் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உள்ளதுபோல் அரண்மனைத் தளம் அமைத்து படப்பிடிப்பு நடந்தது.
ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக இருந்த ரதன் இசையமைக்கிறார். 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பாலா இருவரும் நாயகிகளாக நடிக்க, ஆனந்த்ராஜ், ‘மொட்ட’ ராஜேந்திரன், சிவசங்கர், ‘லொள்ளு சபா’ மனோகர் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT