Published : 01 Mar 2020 10:40 AM
Last Updated : 01 Mar 2020 10:40 AM
ஆணவக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக் கில் சிறையில் அடைக்கப் பட்ட பிரபாகரன் (ரிச்சர்ட் ரிஷி), ஜாமீனில் வெளியே வருகிறார். சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து நோட்டமிடும் அவர், அங்கு வரும் வழக்கறிஞர் கருணாவை யும், அரசியல் பிரமுகர் செஞ்சி சேகரையும் அடுத்தடுத்து கொலை செய்கிறார். அவர் எதற்காக இந்தக் கொலைகளை செய்தார் என்ற பின்னணியை பின்கதையாக விரித்துக் கூறுகிறது படம்.
சாதி ரீதியாக எதிர்பார்க்கப்பட்ட சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங் கள், சாதிப் பெருமிதம் பேசும் கதா பாத்திரங்கள் படத்தில் இருந்தா லும், தனிப்பட்ட முறையில் படம் யாரையும் குறிவைத்து தாக்க வில்லை என்பது பெரிய ஆறுதல். ‘வசன வெட்டுகள்’ படம் நெடுகிலும் இருப்பதைப் பார்க்கும்போது, குறிப்பிட்ட எந்தத் தரப்பையும் இப்படம் காயப்படுத்திவிடக் கூடாது என்று தணிக்கைத் துறை காட்டியிருக்கும் ‘அக்கறை’யை, ‘என்ன வம்சத்தில் பிறந்துட்டு இப்படி அழறே?’ என்ற வசனம் மீதும் காட்டியிருக்கலாம்.
மிதிவண்டியில் தேநீர் விற்பவர் போல பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து, தனக்கான இரைகளை பதுங்கியிருந்து தேடும் புலியைப் போல, நாயகன் தனது எதிரிகளைக் கொல்லும் தொடக்கக் காட்சிகளும், கொலைகளை செய்தவரின் அடை யாளம் தெரியாத நிலையில், அவரை துருதுருவென நெருங் கும் காவல்துறையின் புலன் விசா ரணையும் முதல்பாதி படத்தை விறு விறுப்பாக நகர்த்திச் செல்கின்றன.
காதலர்களுக்கும், காதலர் அல் லாதவர்களுக்கும் வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் பதிவுத் திரு மணம் செய்து தரும் தரகர்கள், போலிப் பதிவுத் திருமணங்களை நடத்தி, அந்த திருமணச் சான்றிதழ் களையே ஆயுதமாகக் கொண்டு பணம் பறிக்கும் வேலையை எப்படி திட்டமிட்டு செய்கிறார்கள் என் பதை விழிப்புணர்வு தரும் வகை யில் சித்தரித்துள்ளார் இயக்குநர்.
போலித் திருமணம், நாடகக் காதல் ஆகியவற்றை மையக் கரு வாகக் கொண்ட திரைக்கதையில் இயற்கை விவசாயம், கிராமப்புற நலன், தண்ணீர் அரசியல் என சில தற்கால அவசியங்களின் குரலும் ஒலிக்கிறது.
என்றாலும், காதல் என்பது சாதி, மத, இன அடையாளங்களைக் கடந்து செல்லும் உலகப் பொது உணர்வு என்பதைப் பற்றி படத்தில் எந்த இடத்திலும் இயக்குநர் சொல்லவில்லை. இதனால், திரைக் கதை ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி குறிவைத்து எய்யப்பட்ட ஆயுதமாகவே தோற்றமளிக்கிறது.
பிரபாகரின் மனைவியான திரௌபதி, ‘அம்மணம் பெண் களுக்கு மட்டும்தானா.. ஏன் உனக்கு இல்லையா?’ என்று பெண்ணிய மும், கிராமிய நலமும் பேசினாலும், சாதிப் பெருமிதம் பேசுவதில் அந்தக் கதாபாத்திரம் ஒரு வீராங்கனை போல சித்தரிக்கப்பட்டிருப்பதில், சாதி உணர்ச்சியைத் தூண்டும் ஆபத்தான கதாபாத்திரமாக இரண் டாம் பாதி திரைக்கதையில் அது அழுத்தமாகப் படர்ந்து கிடக்கிறது.
ஒடுக்கப்பட்டு, நொறுக்கப்பட்ட சமூகத்தின் வலிகளைப் பேசுவதன் மூலம் அவர்களது சமூக விடு தலையை முன்னெடுக்க சினிமா எனும் சாதனத்தைப் பலரும் பயன்படுத்தி வரும் வேளையில், உதறி எறியவேண்டிய சாதிய வன்மத்தை பரப்ப இயக்குநர் அதே சாதனத்தை தேர்ந்தெடுந்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது.
இயக்குநர் மோகன் ஜி-யால் நல்ல படங்களை விறுவிறுப்பாக தரமுடியும் என்று உணர வைத் தாலும்... ஒருசில இடங்களில் நடந்த தவறான உதாரணங்களை எடுத்துக் கொண்டு, காதல் திருமணங்கள் எல்லாமே பெற்றோருக்கு பெரிய அச்சுறுத்தல்தான் என்பதுபோலக் காட்டுகிறது படம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT