Published : 19 Feb 2020 07:33 PM
Last Updated : 19 Feb 2020 07:33 PM
'முகவரி' படம் வெளியாகி 20 ஆண்டுகளை முன்னிட்டு, பி.சி.ஸ்ரீராம் நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.
2000-ம் ஆண்டு வி.இசட்.துரை இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் 'முகவரி'. இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் ஜோதிகா, ரகுவரன், கே.விஸ்வநாத், விவேக், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்திருந்தனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு தேவா இசையமைத்திருந்தார்.
இன்றுடன் (பிப்ரவரி 19) 'முகவரி' வெளியாகி 20 ஆண்டுகளாகிவிட்டது. இதனால் பலரும் இந்தப் படம் வெளியீட்டு நாளைக் கொண்டாடி வருகிறார்கள். தற்போது இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பதிவில், "'முகவரி' திரைப்படம் இருபது வருடங்களுக்கு முன் வெளியானது. படப்பிடிப்பு ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே, இயக்குநர் துரையின் திரைக்கதையும், எல்லா நடிகர்களுடைய அற்புதமான நடிப்பும் அதை என்றும் மறக்க முடியாத அனுபவமாக்கியது.
இன்றுவரை படத்தை சமூக ஊடகங்களில் நினைவுகூர்வதால் முகவரி என்றும் பிடித்த படமாக மாறியது. அதற்கு நன்றி. வாழ்த்துகள் துரை. ரகுவரன், கே விஸ்வநாத் ஆகியோரின் நடிப்போடு அஜித், ஜோதிகாவின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது" என்று தெரிவித்துள்ளார். தற்போது 'இருட்டு' படத்தைத் தொடர்ந்து அமீர் நாயகனாக நடிக்கும் 'நாற்காலி' படத்தை இயக்கி வருகிறார் வி.இசட்.துரை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT