Published : 13 Feb 2020 07:37 AM
Last Updated : 13 Feb 2020 07:37 AM
‘‘ஓர் அடர்ந்த வனம் கம்பீரமாக நிமிர்ந்து நிற்க மரங்கள் காரணம்தான். ஆனால், மரங்கள் மட்டும்தானா என்றால்... இல்லை. காட்டில் ஒரு யானை நாளொன்றுக்கு 50-ல் இருந்து 60 கிலோ மீட்டர் தூரம் நடக்கும். அப்படி இடம்பெயரும்போது ஆங் காங்கே விழும் அதன் சாணத்தில் 50 முதல் 60 விதைகள் இருக் கும். அந்த விதைகள் மழைக் காலங்களில் செடிகளாகி பின்னர் மரமாகும். ஒரு வனத்துக்குப் பின் னால் இப்படி ஒரு சங்கிலித் தொடர் பிணைப்பும் இணைப்பும் உள்ளது. ஆனால், நாம் பல வகைகளில் தொடர்ந்து யானைகளின் அழிவுக்கு காரணமாக இருக்கிறோம்!’’ யானைகள் குறித்த ஆதங்கத்தோடு பேசத் தொடங்கும் இயக்குநர் பிரபுசாலமன், ‘கும்கி’ பாணியில் மீண்டும் காடும்... காடு சார்ந்த களத்தில் ‘காடன்’ படத்தை இயக்கி முடித் துள்ளார். தற்போது படத் தின் இறுதிக்கட்ட வேலை கள் நடந்துகொண்டிருக் கும் சூழலில் பிரபுசாலம னோடு ஒரு வனப்பேச்சு:
‘காடன்’ வழியே என்ன சொல்ல வருகிறீர்கள்?
‘தொடரி’ படத்துக்குப் பிறகு இரண்டு வருஷ உழைப்பைக் கொட்டி எடுத்துக் கொண்டிருக் கும் படம் இது. ‘கும்கி’ படம் எடுக்கத் தொடங் கிய காலகட்டத்திலேயே ஆய்வு செய்யத் தொடங்கிய களம் இது. இப்போதுதான் சாத்தியமாகியுள் ளது. அசாம் பகுதியில் காசி ரங்கா என்ற வனப்பகுதியில் கிட்டத் தட்ட 450 ஹெக்டேர் சுற்றி வளைத்து ‘ரைனோ பார்க்’ என்ற டவுன்சிப் உருவாக்கியபோது, காட்டின் நடுவே 6 கிலோ மீட்டர் தொலை வுக்கு ஒரு தடுப்புச் சுவர் எழுப்பப் படுகிறது. அந்தத் தடுப்பு சுவரால் தன் தாத்தன், பாட்டன் காலகட்டத் தில் இருந்து மியான்மர், பர்மா, மேகாலயா வழியாக யானைகள் அசாமுக்கு பயணித்து வந்த யானை தடம் பாதிக்கப்படுகிறது. இதனால் அவ்வழியே சென்ற யானைகள் திக்குமுக்காடி நிற்கின் றன. அதில் சில யானைகள் சுவரை உடைக்க முற்பட்டு இறந்தும் போயினவாம். இப்படி அநாதை களாக்கப்பட்ட யானைகளை ஒரு தனிமனிதன் போராடி அதன் வழித்தடங்களை எப்படி மீட்டுக் கொடுக்கிறான் என்பதுதான் காட னின் கதை.
அந்த தனிமனிதன்தான் ராணாவா?
‘ஃபாரஸ்ட் ஆஃப் தி மேன்’ என்று அழைக்கப்படும் ஜாதவ் பியான்ங் என்பவர், ஒரு தனிமனிதனாக பிரம்மபுத்ரா கரையோரங்களில் 1,350 ஏக்கர் பரப்பளவில் காடு களை உருவாக்கியவர். கடந்த 2015-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வாங்கியவரும்கூட. இப்படி காடுகளின் மீது அக்கறை கொண்ட மனிதன், அநாதைகளாக்கப்பட்ட யானைகள் சென்று வந்த இடத் தில் கட்டப்பட்ட தடுப்புச் சுவரை உடைத்து, எப்படி அதன் வழித்தடங் களை உருவாக்கி கொடுக்கிறார் என்று திரைக்கதை அமைத்தால் சிறப்பாக இருக்கும் என நினைத் தேன். இந்த இரண்டு உண்மை சம் பவங்களையும் இணைத்து திரைக் கதை எழுதப்பட்ட களம்தான் ‘காடன்’. ஜாதவ் பியான்ங் மனித ரின் தோற்றத்தின் பாதிப்பில் உரு வான அந்தக் காடன்தான் ராணா.
அப்படியென்றால் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு என்ன பாத்திரம்?
காட்டுக்குள் யானைகள் வழித்தடத்தை மறித்து சுவர் எழுப்பும் போது அங்கே மற்ற மற்ற யானை கள் தொந்தரவு இருக்கக் கூடாது என கும்கி யானைப் பாகனாக வரு பவர்தான் விஷ்ணு விஷால். படத் தின் தொடக்கத்தில் நெகடிவ் கதா பாத்திரம் மாதிரி இருந்தாலும் போகப்போக வனத்தின் முக்கியத் துவம், யானைகளின் பாதுகாப்பு என புரிந்துகொண்டு ஒரு கட்டத் தில் அந்த சுவரை இடிக்க தானும் போராட்டத்தில் இறங்கும் ஒரு மனி தான மாறுவார். இந்தக் கதைக்குள் காதல் உள்ளிட்ட மற்ற மசாலா விஷ யங்களுக்கு வேலையே கிடையாது. மேலும், பத்திரிகையாளர் அருந்ததி என்ற கதாபாத்திரம் முக் கிய அங்கம் வகிக்கும். அந்த பாத்திரத்தை ஸ்ரேயா என்ற பெண் ஏற்றிருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக விபத்து என்ற போர்வையில் யானைத் தாக்கு தல் அதிகரித்து வருகிறதே?
ஒரு யானையின் மதிப்பு ரூ.3.5 கோடி. அது இருந்தாலும் பொன். இறந்தாலும் பொன். அதனால்தான் விபத்து, விபரீதம் என பல போர்வைகளில் யானைகள் வேட்டையாடப்பட்டு வருகின்றன.
யானைகள், காடு என கடும் சிரத்தைக்கொண்ட பின்னணியில் மூன்று மொழிகளில் படம் எடுப்பது எப்படி உள்ளது?
உண்மை சம்பவங்களை அடிப் படையாகக் கொண்டு படம் எடுப்ப தும் ஒருவித சவாலான விஷயம் தான். தமிழ் கதை உதகையின் பின் னணியில் நடக்கும், தெலுங்கில் விசாகப்பட்டினம், ஒடிஷா பகுதியில் நடப்பது போல படமாக்கியுள்ளேன். ஹிந்தியில் சத்தீஸ்கரில் நடக்கும். தெலுங்கு மொழியில் நடிக்கும்போது ராணா ஒரே டேக்கில் நடித்துக் கொடுத்துவிடுவார். அதுவே தமிழ், ஹிந்தி என செல்லும்போது தன்னை அறியா மல் தாய்மொழி பேசிவிடுவார். அந்த மாதிரியான காட்சிகள் எடுக்கும் போது அவருக்கு பின்னால் 30 யானைகள் நிற்கும். அவற்றையெல்லாம் திரும்பத் திரும்ப கொண்டு வந்து நிறுத்தி படமாக்கிய அனுபவம் திரில்லாகவே இருந்தது.
இந்திய வனப்பகுதியில் நடக்கும் படத்துக்காக ஏன் தாய்லாந்து சென் றீர்கள்?
நம் ஊரில் ஆடுகள் வளர்ப் பதைப்போல தாய்லாந்தில் யானை களை பட்டியில் அடைத்து வளர்க்க அரசாங்கமே ஆதரவு அளிக்கிறது. அதுவும் ஒன்றிரண்டு யானைகள் அல்ல. 10-க்கும் மேலான யானை களைக்கூட நீங்கள் ஒரு வீட்டில் வளர்க்கலாம். அந்த வளர்ப்பு முறை எங்களுக்கு படமாக்க உபயோக மாக இருந்தது. அதனால் படத்தின் 40 நாட்கள் படப்பிடிப்பு அங்கே நடந்தது.
தொடர்ந்து யானைகள் பின்னணி யான களம் ஏன்?
என்ன செய்வது. என் நேரம். அப்படி அமைகிறது. யானை களோடே வாழ்ந்து பயணித்து நானும் இப்போது ஒரு யானைப் பாகனாகவே ஆகிவிட்டேன். உன்னி என்ற கேரள யானை இப்போது நான் என்ன சொன்னாலும் கேட் கும். ‘கும்கி’ படத்தில் இருந்தே என்னோடு அந்த யானை பயணிக் கிறது. இதைவிட மகிழ்ச்சி என்ன இருக்கப்போகிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT