Published : 06 Feb 2020 08:42 PM
Last Updated : 06 Feb 2020 08:42 PM
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செயலை, இயக்குநர் பார்த்திபன் விமர்சித்துள்ளார்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் புத்துணர்வு முகாம் இன்று (பிப்.6) தொடங்கியது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முகாமைத் தொடங்கி வைத்தார். இதற்கு முன்பாக கோயிலில் பூஜை நடைபெற்றது. அப்போது கோயிலுக்குள் செல்ல காலணியைக் கழட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அதிகாரிகள் சூழ இருந்த அமைச்சர், அங்கு மக்களுடன் நின்று கொண்டிருந்த பழங்குடியினச் சிறுவனை அழைத்து காலணியைக் கழற்றி விடச் சொன்னார். சிறுவன் கழட்டி விடும்போது யாரும் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க முடியாத வகையில் அதிகாரிகள் மறைத்து நின்றிருந்தனர்.
இந்தச் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ட்விட்டரில் வைரலாகி வருகிறது. பலரும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செயலுக்கு தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்தச் செயல் தொடர்பாக நடிகர் மற்றும் இயக்குநர் ரா.பார்த்திபன் தனது ட்விட்டர் பதிவில், "மந்திரிச்சி விடப்பட்ட செருப்பு ! கல்.... (ராமர்) கால் பட்டு அகலிகை ஆனது - திண்டுக் கல்... கால் பட்ட செருப்பின் அகலாத Buckle, பாவப்பட்ட சிறுவன் கை பட்டுச் சிக்கலில் மாட்டிக் கொண்டது!" என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன்.
தவறவிடாதீர்!
குனிந்து பழக்கப்பட்டவர்கள்; காலணியைக் கழட்டக் குனிய முடியவில்லையா? - ஸ்ரீப்ரியா சாடல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT