Published : 11 Nov 2019 01:13 PM
Last Updated : 11 Nov 2019 01:13 PM

‘சூப்பர் சிங்கர் 7’: முருகனுக்கு முதல் பரிசாக வீடு, அனிருத் இசையில் பாடும் வாய்ப்பு

‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் முதல் பரிசு வென்ற முருகனுக்கு, 50 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர்’. சிறந்த பாடகர்களைத் தேர்ந்தெடுக்கும் இந்த நிகழ்ச்சி, சீனியர் மற்றும் ஜூனியர் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது. 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் ஜூனியர் பிரிவில் அடங்குவர்.

இந்த நிகழ்ச்சியின் சீனியர் பிரிவின் 7-வது சீஸன் இறுதிப்போட்டி, கோவையில் உள்ள கொடீசியா அரங்கில் நேற்று (நவம்பர் 10) நேற்று நடைபெற்றது. விக்ரம், புண்யா, முருகன், சாம் விஷால் மற்றும் கெளதம் ஆகிய 5 பேரும் போட்டியாளர்களாகப் பங்கேற்றனர்.

உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயால், ஸ்வேதா மேனன் ஆகிய நால்வரும் நடுவர்களாக இருந்து நடத்திய இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில், மேலும் சில சிறப்பு நடுவர்கள் பங்கேற்று வெற்றியாளர்களைத் தேர்வு செய்தனர்.

இரண்டு சுற்றுகளிலும் போட்டியாளர்கள் பாடிய பாடல்களுக்குத் தரப்பட்ட நடுவர்களின் மதிப்பெண்கள் மற்றும் பார்வையாளர்கள் அளித்த வாக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன்படி, மூக்குத்தி முருகன் என்று அழைக்கப்படும் முருகன், முதல் பரிசைப் பெற்றார். அவருக்கு 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. மேலும், நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கூறியபடி அனிருத் இசையில் பாடும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

இரண்டாம் பரிசு, விக்ரமுக்கு அளிக்கப்பட்டது. 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் இவருக்குப் பரிசாக வழங்கப்படும்.

மூன்றாம் பரிசு, சாம் விஷால் மற்றும் புண்யா இருவருக்கும் சேர்த்து வழங்கப்பட்டது. 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் இவர்களுக்குப் பரிசாக வழங்கப்படும். மேலும், இவர்கள் இருவருக்கும் தன் இசையில் பாட வாய்ப்பு அளிப்பதாகத் தெரிவித்து ஆனந்த அதிர்ச்சி கொடுத்தார் அனிருத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x