Published : 28 Oct 2019 02:54 PM
Last Updated : 28 Oct 2019 02:54 PM

கனத்த மனதோடு ‘பிகில்’ பார்க்கிறேன்: வனிதா விஜயகுமார் உருக்கம்

கனத்த மனதோடு ‘பிகில்’ பார்க்கிறேன் என உருக்கமாகத் தெரிவித்துள்ளார் வனிதா விஜயகுமார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 69 மணி நேரத்தைக் கடந்து நடைபெற்று வருகிறது. இரண்டு வயதேயான சுஜித், 88 அடி ஆழத்தில் சிக்கித் தவித்து வருகிறார்.

10-க்கும் மேற்பட்ட மீட்புக் குழுக்கள் முயற்சி செய்தும், இன்னும் சுஜித்தை மீட்க முடியவில்லை. எனவே, தீபாவளிக் கொண்டாட்டத்தையும் தாண்டி பலரும் சுஜித்துக்காகப் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுடைய அனுதாபங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அமைச்சர் விஜய பாஸ்கர், கரூர் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்ட அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் சம்பவ இடத்திலேயே இருந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். ஆனாலும், இன்னும் எதிர்பார்த்த விஷயம் நடக்கவில்லை.

இந்நிலையில், நடிகை வனிதா விஜயகுமாரும் சுஜித் குறித்து தன்னுடைய அனுதாபத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். “கனத்த மனதோடு ‘பிகில்’ பார்க்கிறேன். எங்களுக்குப் பிடித்த தளபதி விஜய்யின் படத்தைக் குழந்தைகளுடன் பார்த்து ரசிக்கலாம் என்று விரும்பினேன். இறைவா, சுர்ஜித் என் இதயத்தை நொறுக்கிவிட்டான்” எனத் தெரிவித்துள்ளார் வனிதா விஜயகுமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x