Published : 27 Oct 2019 09:07 AM
Last Updated : 27 Oct 2019 09:07 AM

திரை விமர்சனம் - பிகில்

தேசிய அளவிலான மகளிர் கால் பந்து போட்டியில் பங்கேற்க இருக் கிறது தமிழக அணி. அதன் பயிற்சி யாளரான கதிர், தனது அணியுடன், ‘பிகில்’ என்று அழைக்கப்படும் மைக்கேலை (மகன் விஜய்) சந்திக்க வருகிறார். வந்த இடத்தில் மைக்கேலின் எதிரிகள் நடத்தும் கொலை வெறித் தாக்குதலில் சிக்கி படுகாயம் அடைகிறார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கதிர் இல்லாமல், தமிழக அணி தேசியப் போட்டியில் பங்கேற்க முடியாது என்ற சூழ்நிலை உருவாகிறது. அப்போது கதிர் இடத்தை நிரப்ப வருகிறார் மைக்கேல். ஆனால் அணியில் உள்ள பெண்கள் அவரைப் பயிற்சியாளராக ஏற்கத் தயங்கு கின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் கால்பந்து வீராங்கனைகளின் மனதை மைக்கேலால் மாற்ற முடிந்ததா, மைக்கே லுக்கு ‘பிகில்’ என்ற பெயர் எப்படி வந்தது, அவரது பின்னணி என்ன, அவரது எதிரிகள் யார், அவரால் தமிழக அணியை வெற்றி பெறச் செய்ய முடிந்ததா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது கதை.

பின்புலம் ஏதுமற்ற எளிய மனிதர்களுக் கும், அடக்கி ஆள நினைக்கும் ஆண்களால் ஒடுக்கப்படும் பெண்களுக்கும், விளையாட் டும் அதில் கிடைக்கும் வெற்றிகளும் பெரிய அடையாளத்தை தரும் என்ற உயர்ந்த கருத்தைச் சொல்லும் கதை.

ராயப்பன் (அப்பா விஜய்) தொடர்பான காட்சிகள் ‘தளபதி’ திரைப்படத்தை நினைவு படுத்துகின்றன. மகன் பிகிலுக்காக, தேர்வுக் குழு தலைவர் ஜே.கே.சர்மாவை (ஜாக்கி ஷெராப்) ராயப்பன் சந்தித்துவிட்டு வெளியே வரும் காட்சி, ‘பாட்ஷா’ படத்தை நினைவூட்டு கிறது.

வன்முறைக்கு எதிரா கப் பேசும் மைக்கேல், ராயப்பன் கதாபாத்திரங் களை வன்முறையை ஆராதிப்பவர்களாகவே வடிவமைத்திருப்பது பழகிப்போன ஹீரோயிசம்.

ராயப்பன் மைக்கேல் கதாபாத் திரங்களுக்கான வில்லன்களுடைய அணுகு முறையிலும் புதுமை எதுவும் இல்லை. இரட்டை நாயகக் கதா பாத்திரங்கள் வில்லன் கள் இடையிலான இந்தப் போதாமையை ஈடுகட்ட, அனிதா, காயத்ரி ஆகிய இரு வீராங்கனைகளின் கதைகள் வலிந்து சொல் லப்பட்டுள்ளன.

அதேநேரம் தன்னம்பிக்கையைத் தூண்டும் இத்தகைய காட்சிகளில் வசனங்கள் நல்லெண்ணக் கருத்துகளால் நிறைந்திருப்பது பெரும் ஆறுதல். ‘திறமைக்கும், தன்னம்பிக்கைக் கும் முகம் தேவை இல்லம்மா’ என்ற வச னம் உதாரணம். பெரிதாக அலட்டிக்கொள்ளா மல், மிக எளிமையான தோற்ற வேறுபாடு, குரல் மாறுபாடு ஆகியவற்றின் மூலம் அப்பா - மகன் கதாபாத்திரங்களை எளிதாக கடந்து சென்றிருக்கிறார் விஜய்.

கால்பந்து வீரராகவும், பின்னர் பயிற்சி யாளராகவும் வரும் காட்சிகளில் அவரது துறுதுறுப்பும், இளமைத் துள்ளலும் கவனிக்க வைக்கின்றன. மிக கீழ்மையான சித்தரிப்பு கொண்ட ஒரு காட்சியை ஏற்று நடித்துள்ள ஜாக்கி ஷெராப், தான் ‘ஆரண்யகாண்டம்’ படத்தின் நடிகர் என்று கம்பீரமாக நினைவுபடுத்திச் செல்கிறார்.

பிஸியோதெரபிஸ்ட்டாக வரும் நயன் தாரா - விஜய் காதல் காட்சிகள் இன்னும் ஈர்க்கும் விதமாக இருந்திருக்கலாம். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ‘சிங்கப்பெண்ணே’ பாடல் மட்டும் நினைவில் தங்கிவிடுகிறது.

பிரம்மாண்டமான படமாக்கமும், ஒளிப் பதிவும் கோல் அடித்து கண்களை வீழ்த்து கின்றன. கால்பந்து போட்டிக் காட்சிகள், சண்டைக் காட்சிகள், சேஸிங் என படம் முழு வதும் ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுவின் ஆட்சி பரவியிருக்கிறது.

விளையாட்டை மையமாக வைத்து எழு தப்பட்ட திரைக்கதை மற்றும் காட்சியமைப்பு களால் விஜய் ரசிகர்களுக்கான விசிலாக ஒலிக்கிறது இந்த ‘பிகில்’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x