Published : 24 Oct 2019 07:16 PM
Last Updated : 24 Oct 2019 07:16 PM
விஜய் - அட்லீ கூட்டணியில் நாளை ரிலீஸாகவுள்ள படம் ‘பிகில்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராஃப், விவேக், இந்துஜா, வர்மா பொல்லம்மா, யோகி பாபு, ரெபா மோனிகா ஜான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் விஜய்.
இந்தப் படத்தின் புரமோஷனுக்காக ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார் அட்லீ. அவற்றில், சில கேள்வி - பதில்கள் இங்கே...
கேள்வி: எல்லோருக்கும் ராயப்பன் கேரக்டரைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறது. அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க...
அட்லீ: இதுவரைக்கும் நான் பண்ணதுலேயே வெற்றிமாறன் (மெர்சல்) கேரக்டர்தான் என்னுடைய ஃபேவரிட். ‘பிகில்’ படத்துக்குப் பிறகு ராயப்பன். உங்களுக்கும் அதுவாகத்தான் இருக்கும்.
கேள்வி: ‘பிகில்’ படத்தின் முதல் நாள் கலெக்ஷன் பற்றி ஒருவார்த்தையில் சொல்லுங்க...
அட்லீ: கலெக்ஷன் உங்க வேலைப்பா... படம் பண்றதுதான் என் வேலை. கலெக்ஷன் நீங்க பார்த்துக்கோங்க.
கேள்வி: பிரச்சினைகளையும் விமர்சனங்களையும் எப்படி எதிர்கொள்வது அண்ணா?
அட்லீ: எதிர்மறையான விஷயங்களை ஒதுக்கித் தள்ளுங்கள் நண்பா, அண்ணா வழியில்.
கேள்வி: நாளைக்கு முதல் நாள் முதல் காட்சி எங்க பார்க்கப் போறீங்க?
அட்லீ: எப்போதுமே வெற்றிதான் (குரோம்பேட்டை)
கேள்வி: தளபதியை வைத்து முழுமையான கேங்ஸ்டர் படம் எப்போ பண்ணப் போறீங்க?
அட்லீ: செஞ்சாச்சே... ‘பிகில்’ பாருங்க.
கேள்வி: நீங்கள் ஷாருக் கானுடன் இணைந்து படம் பண்ணப் போகிறீர்களா? இல்லையா?
அட்லீ: ஷாருக் கான் மீது எனக்கு மிகப்பெரிய அன்பும் மரியாதையும் உள்ளது. அவருக்கும் என் வேலை பிடித்திருக்கிறது. விரைவில் நாங்கள் இணைந்து ஏதாவது செய்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கேள்வி: நீங்கள் ‘கேஜிஎஃப்’ படம் பார்த்தீர்களா?
அட்லீ: அந்தப் படத்தில் உள்ள அனைத்து ஆக்ஷன் காட்சிகளும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. யஷ் ப்ரோவையும் பிடித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT