Published : 10 Oct 2019 03:15 PM
Last Updated : 10 Oct 2019 03:15 PM
மதுரை;
மதுரையில் நடிகர் ‘அஜித்’ ரசிகர் ஒருவர், தன்னுடைய மகனுக்கு ‘தல அஜித்’ என்றும், மகளுக்கு ‘அஜிதா’ என்றும் பெயர் சூட்டியதோடு அதே பெயரில் பிறப்பு சான்றிதழும் வாங்கி பள்ளியில் சேர்த்துள்ளார். தற்போதுஅவர்களின் இந்த பிறப்பு சான்றிதழ், சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அஜித்தின் பிறந்த நாளையும், அவர் படம் வெளியாகும் மகிழ்ச்சியையும் மதுரை ரசிகர்கள் எல்லோரையும் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் வித்தியாசமாக கொண்டாடுவார்கள். தற்போது மதுரையில் ஜீவா நகரை சேர்ந்த மதுரை வீரன் என்ற அஜித் ரசிகர் தன்னுடைய மகனுக்கு ‘தல அஜித்’ என்ற பெயரில் மாநகராட்சியில் பிறப்பு சான்றிதழ் வாங்கி பள்ளியில் எல்கேஜி சேர்த்துள்ளார்.
அஜித்திற்கு வெறித்தனமான ரசிகர்கள் உண்டு. ஆனால், அவரது பெயரிலே தன்னுடைய குழந்தைக்கு சான்றிதழ் வாங்கி பள்ளியில் சேர்த்துள்ளதை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்கில் கொண்டாடி வருகின்றனர். ‘தல அஜித்’ என்ற அந்த பிறப்பு சான்றிதழ் தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர்போன்ற சமூக வலைதளங்கில் அஜித் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இதுகுறித்து மதுரை வீரன் மனைவி ஜோதி லெட்சுமி கூறுகையில், ‘‘நான், என்னுடைய கணவர் உள்பட எங்க குடும்பமே அஜித்தின் தீவிர ரசிகர்கள். எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் அஜித் பெயரை வைக்க நினைத்து இருந்தோம்.ஆனால், முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறந்தது. ஆனாலும், வேறு பெயர் வைக்க மனமில்லாமல் அஜித் பெயரிலே அஜிதா என்று பெயர் சூட்டினோம். அஜித்தை எங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கிறோம்.
அந்த பாசத்திலே எங்களுக்கு 2வது பிறந்த ஆண் குழந்தைக்கு ‘தல அஜித்’ என்று பெயர் சூட்டி, அந்த பெயரிலே மாநகராட்சியில் பதிவு செய்து பிறப்பு சான்றிதழும் வாங்கியுள்ளோம். வீட்டிற்கு பக்கத்தில் உள்ள பள்ளியில் அதே பெயரில் சேர்த்தோம். பள்ளியில் அவனுடன் படிக்கிற குழந்தைகள் நடிகரை அஜித்தை அழைப்பதுபோல ‘தல..தல, ’ன்னு அழைத்துள்ளனர். அந்த தகவல் எப்படியோ மற்ற குழந்தைகள், ஆசிரியர்கள் மூலம் தற்போது வெளியே தெரிய வந்துள்ளது. அஜித் புண்ணியத்தில் எங்கள்குழந்தையும், அவனது பிறப்பு சான்றிதழும் எல்லோர் கவனத்தையும் ஈர்த்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது, ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT