Published : 09 Oct 2019 01:06 PM
Last Updated : 09 Oct 2019 01:06 PM
விஜய் நடித்து வரும் படங்களுக்கான சோதனை 'தளபதி 64' படத்துக்குத் தொடர்ந்துள்ளது. இதனால் எப்படிக் கட்டுப்படுத்துவது என்ற ஆலோசனையில் படக்குழு இறங்கியுள்ளது.
எப்போதுமே பெரிய பொருட்செலவில் உருவாகும் படங்களுக்கு, நாயகனின் லுக் உள்ளிட்ட எதுவும் இணையத்தில் லீக் ஆகக் கூடாது என்று படக்குழுவினருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதையும் மீறி, பல படங்களுக்கு போட்டோ ஷூட் நடைபெறும்போதே லுக் லீக்காவது, படப்பிடிப்பு தளங்களின் வீடியோக்கள், பாடல்கள் லீக் ஆவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த விஷயத்தில் சமீபமாக விஜய் படங்கள்தான் அதிகமாகச் சிக்குகின்றன. 'சர்கார்' படத்தின் போட்டோ ஷூட் நடைபெறும்போதே, அதன் படங்கள் இணையத்தில் வெளியாகின. 'மெர்சல்' பட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் வெளியாகின. 'பிகில்' படத்துக்கு 'சிங்கப்பெண்ணே' பாடல் லீக், ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் லீக், படத்துக்காகப் போடப்பட்ட பிரம்மாண்டமான கால்பந்து ஸ்டேடியம் லீக் ஆகியவற்றால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.
தற்போது இந்த சோகம் 'தளபதி 64' படத்துக்கும் தொடர்கிறது. படப்பிடிப்பு தொடங்கி 6 நாட்கள் ஆகியுள்ள நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் விஜய் பனியனுடன் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு, மேள தாளத்துக்கு கும்பலுடன் நடனமாடுவது, நடந்து செல்வது என இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவால் படக்குழு பெரும் ஆச்சரியத்தில் இருக்கிறது.
வீடியோவை எங்கிருந்து எடுத்துள்ளனர், எப்படித் தடுப்பது உள்ளிட்ட ஆலோசனையில் இறங்கியுள்ளனர். மேலும், படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்குள் இருந்து எந்தவொரு புகைப்படமும், வீடியோவும் லீக் ஆகாததால் படக்குழு கொஞ்சம் நிம்மதியடைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment