Published : 07 Oct 2019 11:40 AM
Last Updated : 07 Oct 2019 11:40 AM
ஹிப் ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடித்து வரும் 'நான் சிரித்தால்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
விஷால் நடித்த 'ஆம்பள' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. அதற்கு முன்னதாக பல்வேறு படங்களில் பாடல்களை மட்டுமே பாடி வந்தார். மேலும், தனியாக இசை ஆல்பங்களையும் உருவாக்கி வந்தார்.
'ஆம்பள' படத்தைத் தொடர்ந்து 'இன்று நேற்று நாளை', 'தனி ஒருவன்', 'அரண்மனை 2', 'கதகளி' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைப்பாளராக ஆதி பணிபுரிந்தார். இதனைத் தொடர்ந்து 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் ஆதி நாயகனாகவும் அறிமுகமானார். வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து 'நட்பே துணை' படத்திலும் நாயகனாக நடித்தார்.
இவ்விரண்டு படங்களையுமே இயக்குநர் சுந்தர்.சியே தயாரித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஹிப் ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்கும் 3-வது படத்தையும் சுந்தர்.சியே தயாரித்து வருகிறார். இதன் தலைப்புடன் கூட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
'நான் சிரித்தால்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தைப் புதுமுக இயக்குநர் ராணா இயக்கியுள்ளார். குறும்படங்கள் இயக்கி வந்த ராணா, தீவிரமான ரஜினி ரசிகர். ஆகையால், 'நான் சிரித்தால்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ரஜினி வெளியிட்டுள்ளார். "இந்தப் படத்தில் மாறுபட்ட ஹிப் ஹாப் தமிழா ஆதியைப் பார்ப்பீர்கள்" என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் ராணா.
இதில் ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் யாரெல்லாம் நடித்துள்ளனர் என்ற விவரத்தைப் படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஐஸ்வர்யா மேனன், படவா கோபி உள்ளிட்டோர் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
With the blessings of my thalaivar, Superstar @rajinikanth, FL of “Naan Sirithal”
I'm immensely thankful for @hiphoptamizha na, Sundar C sir & grateful to my mentor-@shankarshanmugh sir for inspiring us to dream big! Can’t wait to present you guys a different version of HHT asap! pic.twitter.com/bzAfzEs0gY— Raana (@raanaonline) October 7, 2019
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT