Published : 18 Jul 2019 01:18 PM
Last Updated : 18 Jul 2019 01:18 PM

தமிழ் மக்கள் முட்டாள்தனமாக நடந்து கொள்கிறார்கள்: 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட வனிதா

வனிதா விஜயகுமார் | கோப்புப் படம்

தமிழ் மக்கள் முட்டாள்தனமாக நடந்து கொள்ளக்கூடியவர்கள் என்று 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட வனிதா தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'பிக் பாஸ்' சீசன் 3. சனி மற்றும் ஞாயிறு மட்டும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். மீதமுள்ள நாட்களில் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு இடையேயான நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இதில் போட்டியாளராகக் கலந்துகொண்ட வனிதா விஜயகுமார், கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். வீட்டுக்குள் இருக்கும் போதே அவருடைய செயல்பாடுகள் குறித்து சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சை உருவானது.

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவுடன் வனிதா 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு[ பேட்டியொன்று அளித்திருக்கிறார். அதில் 'வெளியேற்றப்பட்டவுடன் என்ன நினைத்தீர்கள்' என்ற கேள்விக்கு வனிதா விஜயகுமார் “என்னை நிகழ்ச்சியிலிருந்து நீக்கியது எனக்கு உண்மையில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஏனெனில் நான் வலுவான ஒரு போட்டியாளர். மற்றவர்களின் முக பாவனைகளிலிருந்து அவர்களுக்கும் அதிர்ச்சிதான் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 

நேயர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை என்னால் கணிக்க முடியவில்லை.  தங்களை உண்மையாக வெளிப்படுத்தும் போட்டியாளர்களை விரும்புகிறார்களா அல்லது கேம் ஆடுபவர்களை விரும்புகிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. இதை முதலில் அவர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும். என்னை வெளியேற்ற முடிவெடுத்து (நான் எதிர்பார்த்தது போலவே) என் பெயர் வந்த போது நான் அதைப்பற்றி பெரிதாக ஒன்றும் நினைக்கவில்லை. ஆனால், என்னுடைய உடமைகளை எடுத்துக்கொண்டு புறப்படத் தயாராக, அறிவிப்பு வருவதற்காகக் காத்திருந்த போது, நான் வெளியே வந்துவிடும் மனநிலையில் தான் இருந்தேன்.. 

நான் என் ஆளுமைக்கு எப்போதும் உண்மையாக இருக்கவே விரும்புவேன். அதாவது நேரடியாக, வெளிப்படையாக முகத்துக்கு நேராகப் பேசிவிடுவது. என்னை பிக் பாஸ் வீட்டுக்கு அழைத்த பிறகு நான் வேறு மாதிரி இருக்க முடியுமா என்ன? ஆனால் இந்த தமிழ் மக்கள் முட்டாள்தனமாக நடந்து கொள்ளக்கூடியவர்கள் தான். 

நான் தமிழச்சி என்பதில் பெருமை கொள்கிறேன். நான் இந்த மாநிலத்தை நேசிக்கிறேன்.  ஆனால் இங்கு நேயர்களை எளிதில் திசை திருப்ப முடியும், சிலபல கண்ணீர்களுக்கு அவர்கள் வீழ்ந்து விடுகிறார்கள்.  மற்றவர்கள் மீது அளவுக்கு அதிகமாக இவர்கள் பரிதாப உணர்வு கொள்கின்றனர். இதே மனிதர்கள்தான் ஆன்லைனில் கள்ளத்தனமாக சினிமாக்களைப் பார்ப்பவர்களாகவும் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார் வனிதா விஜயகுமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x