Last Updated : 07 Jun, 2015 03:20 PM

 

Published : 07 Jun 2015 03:20 PM
Last Updated : 07 Jun 2015 03:20 PM

2 நாட்களில் ரூ.2 கோடி: வசூலைக் குவிக்கும் காக்கா முட்டை

மணிகண்டன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் 'காக்கா முட்டை' திரைப்படம், திரையரங்குகளில் வசூலை வாரிக் குவித்து வருகிறது. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரது கூட்டுத் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் 'காக்கா முட்டை'.

சிறுவர்கள் ரமேஷ், விக்னேஷ், ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

பல்வேறு விருதுகளை வாங்கி குவித்திருக்கும் இப்படம், இரண்டு தேசிய விருதுகளையும் வென்றிருக்கிறது. ஜூன் 5-ம் தேதி வெளியாகி இருக்கும் இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

"சின்ன படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்திருக்கிறது. எந்த ஒரு பெரிய நடிகரும் நடிக்காமல், இந்தியளவில் இரண்டு நாட்களில் ரூ.2.4 கோடி வசூல் செய்திருக்கிறது. இது ஒரு நல்ல வசூலாகும்" என்று வர்த்தக ஆய்வாளர் த்ரிநாத் தெரிவித்தார்.

'காக்கா முட்டை' படத்தைத் தொடர்ந்து வித்தார்த் நடித்து தயாரித்திருக்கும் 'குற்றமும் தண்டனையும்' திரைப்படத்தை மணிகண்டன் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x