Published : 19 Jun 2015 08:04 AM
Last Updated : 19 Jun 2015 08:04 AM

அன்றாட நடவடிக்கைகளில் உறுப்பினர்கள் தலையிடக் கூடாது: நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் வேண்டுகோள்

நடிகர் சங்க உறுப்பினர்கள் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சித் தலை வரும், நடிகர் சங்கத் தலைவரு மான சரத்குமார் நேற்று மதுரை ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற் றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

என்னை குற்றம் சாட்டியவர் களை நான் சகோதரர்களாகவே நினைக்கிறேன். நடிகர்கள் ஒற் றுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். விமர்சனங் களை சிலர் தவறாகப் புரிந்து கொள்வதால் நடிகர் சங்கத் தேர் தலில் தற்போது தேவையில்லாத பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுக் குழுவில் கேள்வி கேட்கும் உரிமை பங்குதாரர்கள் அனைவருக்கும் உண்டு. ஆனால், அவர்கள் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது.

சினிமா துறையினர் அனை வரும் மகிழ்ச்சியாக இருக்க வேண் டும் என்ற காரணத்தால் நடிகர் சங்கம் மட்டுமின்றி பிற பிரச் சினைகளைத் தீர்ப்பதற்காகவும் பாடுபட்டுள்ளேன். என்னை குற்றம் சாட்டியவர்களை நான் சகோ தரர்களாகவே நினைக்கிறேன். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

நடிகர் சங்கம் குறித்த யாரோ சிலரின் தூண்டுதல் காரணமாக தவறான கருத்துகள் பதிவு செய் யப்படுவதை பார்க்கும்போது வருத்தமாகவும், வேதனையாக வும் உள்ளது. தேர்தலில் எங்கள் அணி நிச்சயமாக வெற்றி பெறும்.

நடிகர் சங்கப் பொறுப்பிலிருந்து ஏற்கெனவே நான் பதவி விலகுவ தாகக் கூறியபோது கட்டிடம் கட்டிக் கொடுத்து செல்லுமாறு சங்கத்தினர் கூறியதாலேயே இன்னும் நீடிக்கிறேன்.

சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர். வி.கே.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர். உள்ளிட்டோர் நாடகத்திலிருந்து வந்தவர்கள்தான். ஆனால் மன்சூர் அலிகான் நாடக நடிகர்களை சேர்க்க கூடாது என சரித்திரம் புரியாமல் பேசுகிறார் என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x