Last Updated : 16 Jun, 2015 01:50 PM

 

Published : 16 Jun 2015 01:50 PM
Last Updated : 16 Jun 2015 01:50 PM

சரியான ஹிட் கொடுத்து ரொம்ப நாளாச்சு: ஜெயம் ரவி

சரியான ஹிட் படம் கொடுத்து ரொம்ப வருஷமாகி விட்டது என்று 'ரோமியோ ஜூலியட்' பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெயம் ரவி தெரிவித்தார்.

லஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவி, ஹன்சிகா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'ரோமியோ ஜூலியட்'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை நந்தகோபால் தயாரித்திருக்கிறார். காஸ்மோ சிவா இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டார்.

'ரோமியோ ஜூலியட்' மக்களிடையே வரவேற்பு பெற்றிருப்பதால் காஸ்மோ சிவா சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அச்சந்திப்பில் இயக்குநர் லஷ்மன், ஜெயம் ரவி, நந்தகோபால் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

அச்சந்திப்பில் ஜெயம் ரவி, "நான் சரியான ஹிட் கொடுத்து ரொம்ப வருஷமாச்சு. இந்த வருஷம் எப்படியும் மக்கள் பாராட்டும்படி ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அது 'ரோமியோ ஜூலியட்' மூலம் நிறைவேறி இருக்கிறது. இந்த படம் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட காரணமான இசையமைப்பாளர் இமானுக்கு என் நன்றி. ஹன்சிகா என்னைவிட மிக அற்புதமாக நடித்திருந்தார். ரசிகர்கள் அனைவரும் ஹன்சிகாவை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்." என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x