Published : 09 Jun 2015 05:20 PM
Last Updated : 09 Jun 2015 05:20 PM

ஜூன் 13 நெருக்குதல்: ரஜினியின் மவுனத்துக்கு பின்னால்..?

ரசிகர்களுக்கே மறந்துவிட்ட 'லிங்கா', அப்படம் சார்ந்த பிரச்சினைகளால் நடிகர் ரஜினிக்கு தொடர்ந்து நெருக்குதல்களைத் தந்து வருகிறது.

இதன் உச்சகட்டமாக திகழ்கிறது, தன் வீட்டுக்கு முன்பு இம்மாதம் 13-ம் தேதி 'லிங்கா பாதிப்புக் குழு' விநியோகஸ்தர்கள் நடத்துவதாக அறிவித்துள்ள போராட்டம்.

லிங்கா இழப்பு சர்ச்சை, சிங்காரவேலன் தலைமையிலான விநியோகஸ்தார்களின் தளராத போராட்டம், அதன் தொடர்ச்சியான் விநியோகஸ்தர்கள் - தயாரிப்பாளர் சங்கம் மோதல், சமாதானப் பேச்சுவார்த்தை... இப்படித் தீர்வின்றி தொடர்கிறது இந்தப் பிரச்சினை.

'பாஸ்கர் தி ராஸ்கல்' பிரச்சினை

இதனிடையே, ரஜினிக்கு 'பாஸ்கர் தி ராஸ்கல்' ரீமேக் சர்ச்சை வேறு. மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற 'பாஸ்கர் தி ராஸ்கல்' தமிழ் ரீமேக்கில் ரஜினி நடிக்க விரும்பம் தெரிவித்தார் என்று தயாரிப்பாளர் துரைராஜ் கூறி வருகிறார். இந்த விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்தில் பெரும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

'பாஸ்கர் தி ராஸ்கல்' ரீமேக் உரிமை துரைராஜிடம் இருப்பது அறிந்து, 50 தடவைக்கும் மேலாக ரஜினிகாந்த் தனது நம்பர் போன் செய்து பேசினார் என்று தயாரிப்பாளர் கூறி வருகிறார். தாணு தயாரிப்பில் ரஞ்சித் இயக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கிவிட்டால், இந்த விவகாரத்தை சும்மா விடப்போவதில்லை என்ரு தெரிவித்து வருகிறார். காரணம், சம்பளம் கொடுக்க வேண்டும் என்று வட்டிக்கு பணம் வாங்கி அதற்கு தற்போது வட்டி கட்டி வருகிறாராம். இச்சர்ச்சை இன்னும் சில நாட்களில் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறது.

ஜூன் 13 நெருக்குதலை சமாளிப்பது எப்படி?

'லிங்கா பாதிப்புக் குழு' விநியோகஸ்தர்கள் ரஜினி வீட்டின் முன்பு 13-ம் தேதி போராட்டம் நடத்துவதில் திட்டவட்டமாக இருக்கிறார்கள். இன்னும் ரூ.15 கோடி செட்டில் செய்ய வேண்டும் என்பது அவர்களது வலியுறுத்தல்.

இந்த விவகாரத்தைப் பொருத்தவரையில், கடைசி வரை அமைதி காத்தே - வாய் திறந்திடாமால் - அறிக்கை விடாமல் எல்லாவற்றையும் தீர்த்துவிடலாம் என்பதில் ரஜினி தீர்க்கமாக இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

தனது நெருங்கிய நண்பர்களிடம் "தொடர்ச்சியாக 'லிங்கா' விஷயத்தில் எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசி வருகிறார்கள். போலீஸில் புகார் கொடுக்கட்டுமா?" என்று ஆலோசனை கேட்டிருக்கிறாராம் ரஜினி. அதற்கு, "வேண்டாம் சார். நீங்கள் புகார் கொடுக்கும் அளவுக்கு அவர்கள் பெரிய ஆள் இல்லை" என்று அவரது நண்பர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்களாம்.

அதேவேளையில், தன் வீட்டின் முன்பு எவரேனும் போராட்டம் நடத்தினால், அதை சட்ட ரீதியாக எதிர்கொள்வது என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறாராம். இது தொடர்பாக, போலீஸிடம் புகார் அளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் அவர் திட்டமிட்டிருக்கிறாராம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x