Last Updated : 15 Jun, 2015 06:59 PM

 

Published : 15 Jun 2015 06:59 PM
Last Updated : 15 Jun 2015 06:59 PM

ஜூன் 22-ல் புலி ஃபர்ஸ்ட் லுக் டீஸர்: சிம்புதேவன் அறிவிப்பு

விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி அன்று 'புலி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளியாக உள்ளது. இதை இயக்குநர் சிம்புதேவன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'புலி'. ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

ஆதித்யா ராம் ஸ்டூடியோ, சாலக்குடி, திருப்பதி வனப்பகுதி , கம்போடியா என பல இடங்களில் படப்பிடிப்புகள் நடைபெற்றன. 'புலி' படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து சிம்புதேவன் பேசுகையில், "ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்த நாளன்று 'புலி' ஃபர்ஸ்ட் லுக் டீஸரை வெளியிட தீர்மானித்திருக்கிறோம். விஜய் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுக்கும்''என்று கூறியுள்ளார்.

விஜய் நடித்த படங்களில் அதிக பொருட்செலவில் உருவாக்கி இருக்கும் படம் 'புலி' என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புதேவன் பேசும் வீடியோ: