Last Updated : 29 Jun, 2015 02:40 PM

 

Published : 29 Jun 2015 02:40 PM
Last Updated : 29 Jun 2015 02:40 PM

எடிட்டர் ஆண்டனி இயக்கத்தில் தயாராகிறது நைட் ஷோ

எடிட்டர் ஆண்டனி இயக்கி வந்த 'ஷட்டர்' படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு 'நைட் ஷோ' என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.

தமிழ்த் திரையுலகின் தற்போதைய முன்னணி எடிட்டர்களில் முக்கியமானவர் ஆண்டனி. இயக்குநர் ஷங்கர், கே.வி.ஆனந்த் உள்ளிட்டவர்களின் படங்களுக்கு எடிட்டராக பணியாற்றுபவர் ஆண்டனி.

தற்போது பல்வேறு படங்களுக்கு எடிட்டராக பணியாற்றி வருபவர்கள் இவரிடம் உதவியாளராக பணியாற்றியவர்கள்தான். மலையாளத்தில் ஜோ மேத்திவ் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'ஷட்டர்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக நினைத்தார் ஆண்டனி.

தனது எடிட்டிங் பணிகளுக்கு இடையூறு வராமல் சத்யராஜ், அனுமோல், கல்யாணி நடராஜன்,தீட்சிதா கோத்தாரி உள்ளிட்ட பலர் நடிக்க 'ஷட்டர்' ரீமேக்கையும் இயக்கி வந்தார்.

தற்போது தனது படத்திற்கு 'நைட் ஷோ' என்று பெயரிட்டு இருக்கிறார். அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கின்றன. இப்படத்தை இயக்குநர் விஜய் தயாரித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x