Last Updated : 03 Jun, 2015 12:18 PM

 

Published : 03 Jun 2015 12:18 PM
Last Updated : 03 Jun 2015 12:18 PM

விஷால் - பாண்டிராஜ் படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பை இம்மாதம் துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

சிம்பு, நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க 'இது நம்ம ஆளு' படத்தை இயக்கி வருகிறார் பாண்டிராஜ். இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் படமாக்கப்பட இருக்கிறது. நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது.

'இது நம்ம ஆளு' தாமதத்தால் சூர்யாவின் '2டி நிறுவனம்' தயாரிக்கும் 'ஹைக்கூ' படத்தை இயக்கி வந்தார் பாண்டிராஜ். இப்படத்திலும் இரண்டு பாடல்கள் மட்டுமே பாக்கி இருக்கிறது. விரைவில் இதற்கான படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து விஷால் தயாரிக்கவிருக்கும் படத்தை இயக்க இருக்கிறார் பாண்டிராஜ். சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துவரும் 'பாயும் புலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, பாண்டிராஜ் படத்தை துவங்க திட்டமிட்டு இருக்கிறார் விஷால். 'பாயும் புலி' படத்தில் இன்னும் 3 பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட இருக்கிறது.

எப்போது படப்பிடிப்பு துவக்கம் என்று படக்குழுவிடம் கேட்ட போது, "இம்மாதம் 10ம் தேதி தொடங்க திட்டமிட்டு இருக்கிறோம். விஷால் நடிப்பில் வெளியான படங்களில், இப்படம் வித்தியாசமானதாக இருக்கும். படப்பிடிப்பு துவக்க நாளில் வேறு யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்று அறிவிக்க இருக்கிறோம்" என்று தெரிவித்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x