Last Updated : 19 May, 2015 04:05 PM

 

Published : 19 May 2015 04:05 PM
Last Updated : 19 May 2015 04:05 PM

விஜய் சேதுபதிக்கு வில்லனாக பார்த்திபன்

'நானும் ரவுடிதான்' படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஜோடிக்கு வில்லனாக பார்த்திபன் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'நானும் ரவுடிதான்'. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். தனுஷ் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் துவங்கி நடைபெற்று வந்தது. பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்று படக்குழு தெரிவித்து வந்தது. ஆனால், இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடித்து வருகிறார் பார்த்திபன். பார்த்திபன் காட்சிகள் அனைத்தையுமே புதுச்சேரியில் படமாக்கி இருக்கிறார்கள்.

தற்போது 'நானும் ரவுடிதான்' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியீட்டு தேதியை அறிவிக்க இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x