Last Updated : 20 May, 2015 12:17 PM

 

Published : 20 May 2015 12:17 PM
Last Updated : 20 May 2015 12:17 PM

எங்களுக்கு எல்லாமே விஜய்தான்: வீடியோவில் புலி படக்குழு நெகிழ்ச்சி

"எங்களுக்கு எல்லாம் அண்ணன் விஜய்தான்" என்று 'புலி' படக்குழு வெளியிட்டுள்ள வீடியோ தொகுப்பில் அப்படத்தில் பணியாற்றியவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'புலி'. ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் விஜய்யோடு நடித்து வருகிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்தார். பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த 'புலி' படப்பிடிப்பு முடிவுற்றது. தற்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மற்றும் இதர பணிகளைத் துரிதப்படுத்த இருக்கிறார்கள். விஜய் நடித்த படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் 'புலி' என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 'புலி' படக்குழுவில் பணியாற்றியவர்கள் தங்களுக்கு விஜய் எவ்வளவு பிடிக்கும் என்பதையும் அவர்களது படப்பிடிப்பு அனுபவங்களை ஒரு வீடியோவாக உருவாக்கி வெளியிட்டு இருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை உரிமையை பெற்றிருக்கும் சோனி மியூசிக் நிறுவனத்தின் யூடியூப் தளத்தில் 'புலி' படக்குழு பேசியுள்ள வீடியோ தொகுப்பு வெளியாகி இருக்கிறது.

'புலி' படக்குழு வெளியிட்டுள்ள வீடியோ தொகுப்பு: