Last Updated : 30 May, 2015 11:19 AM

 

Published : 30 May 2015 11:19 AM
Last Updated : 30 May 2015 11:19 AM

மாசு வசனங்கள்: இணையத்தில் கொந்தளிக்கும் அஜித் - விஜய் ரசிகர்கள்!

'மாசு' படத்தில் அஜித், விஜய் படங்களின் வசனங்களை உபயோகித்திருக்கும் இடங்கள் குறித்து ரசிகர்களிடையே இணையத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, சமுத்திரக்கனி, பிரேம்ஜி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'மாசு'. யுவன் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

விஜய் நடித்த 'கத்தி', 'துள்ளாத மனமும் துள்ளும்' மற்றும் அஜித் நடித்த 'ஆரம்பம்', 'வீரம்' உள்ளிட்ட படங்களின் வசனங்கள் மற்றும் பின்னணி இசையினை 'மாசு' படத்தின் காட்சிகளில் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள்.

இதில் 'கத்தி' படத்தின் பின்னணி இசையினை சூர்யா கத்தியை எடுக்கும் காட்சியிலும், 'வீரம்' பின்னணி இசையினை 'நான் கடவுள்' ராஜேந்திரன் அறிமுக காட்சியிலும் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். அதே போல சூர்யா, பிரேம்ஜி இருவரும் கப்பல் படை அதிகாரிகளாக வரும் காட்சியில் சூர்யாவின் பெயர் (ஜெகதீஷ்) மற்றும் பிரேம்ஜியின் பெயர் 'விநாயக் மகாதேவ்' என வருவது போல காட்சிகள் அமைத்திருப்பார் வெங்கட்பிரபு.

இக்காட்சிகளால் அஜித் ரசிகர்கள் " எப்படி இயக்குநர் வெங்கட்பிரபு, ஒரு காமெடியனுக்கு அஜித் பெயர் மற்றும் பின்னணி இசை, நாயகனுக்கு விஜய் பெயர் மற்றும் பின்னணி இசையை உபயோகப்படுத்தலாம்?" என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே போல விஜய் ரசிகர்கள் பலரும் அஜித் ரசிகர்களை கிண்டல் செய்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x