Last Updated : 19 May, 2015 04:07 PM

 

Published : 19 May 2015 04:07 PM
Last Updated : 19 May 2015 04:07 PM

ஜூன் 5ம் தேதி வெளியாகிறது காக்கா முட்டை

பல்வேறு விருதிகளை வென்ற 'காக்கா முட்டை' திரைப்படம் ஜூன் 5ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரது கூட்டுத் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் 'காக்கா முட்டை'. சிறுவர்கள் விக்னேஷ் மற்றும் ரமேஷ், ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடிக்க இயக்குநர் மணிகண்டன் இயக்கி இருக்கிறார். சிம்பு கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தை பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

இத்திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றிருக்கிறது. அதுமட்டுமன்றி சிறந்த குழந்தைகள் படம் மற்றும் சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் ஆகிய இரண்டு தேசிய விருதுகளை வென்றிருக்கிறது.

தேசிய விருது வென்றதைத் தொடர்ந்து படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீடு ஆகியவை நடைபெற்றது. தற்போது இப்படத்தை வெளியிடும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் ஜூன் 5ம் தேதி 'காக்கா முட்டை' வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x