Published : 15 May 2015 11:58 AM
Last Updated : 15 May 2015 11:58 AM

ஜூன் 12-ல் வெளியாகிறது இனிமே இப்படித்தான்

சந்தானம் நாயகனாக நடிக்கும் 'இனிமே இப்படித்தான்' ஜூன் 12ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.

'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் புதிய படம் 'இனிமே இப்படித்தான்'. 'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் மூலம் அனைவரது பாராட்டையும் பெற்ற முருகானந்த் (முருகன் மற்றும் பிரேம் ஆனந்த் என இருவர்) இப்படத்தை இயக்கி இருக்கிறார்கள்.

சந்தானத்தின் ஜோடியாக அஸ்னா மற்றும் அகிலா கிஷோர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து, தற்போது இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இப்படத்தில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாதம் 22ம் தேதி வெளியாகும் என திட்டமிட்டப்பட்டு பணிகளைத் துரிதப்படுத்தி வந்தார்கள். ஆனால், பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தில் படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், "'இனிமே இப்படித்தான்' திரைப்படம் ஜூன் 12ம் தேதி வெளியாகும்" என்று சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x