Last Updated : 07 May, 2015 12:04 PM

 

Published : 07 May 2015 12:04 PM
Last Updated : 07 May 2015 12:04 PM

அஜித் - சிவா படப்பிடிப்பு இன்று முதல் துவக்கம்: தீபாவளி ரிலீஸ்

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் துவங்கப்பட்டு இருக்கிறது.

'என்னை அறிந்தால்' படத்தைத் தொடர்ந்து 'வீரம்' இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் அஜித். இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க முன்வந்தார். ஸ்ருதிஹாசன் நாயகி, அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன், அனிருத் இசை என படக்குழுவினர் ஒவ்வொருவராக ஒப்பந்தம் செய்து வருகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் சென்னை பின்னி மில்லில் துவங்கி இருக்கிறது. அங்கு கொல்கத்தா மார்க்கெட் போன்ற பிரம்மாண்ட செட் போடப்பட்டு இருக்கிறது. அங்கு லட்சுமி மேனன் முன்னிலையில் அஜித் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

நவம்பர் 9ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x