Last Updated : 14 May, 2015 11:23 AM

 

Published : 14 May 2015 11:23 AM
Last Updated : 14 May 2015 11:23 AM

செப்டம்பரில் சிங்கம் 3 துவக்கம்: சூர்யாவுடன் மீண்டும் இணையும் ஸ்ருதிஹாசன்?

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் 'சிங்கம் 3' படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'சிங்கம்', 'சிங்கம் 2' ஆகியவற்றைத் தொடர்ந்து இயக்குநர் ஹரி - சூர்யா மீண்டும் 'சிங்கம் 3' படத்துக்காக இணைந்திருக்கிறார்கள். தற்போது விக்ரம்குமார் இயக்கத்தில் '24' படத்தில் நடித்துவரும் சூர்யா, அப்படத்தைத் தொடர்ந்து 'சிங்கம் 3' படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்துக்கு ப்ரியன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்க இருக்கிறார். சூர்யாவின் காதலி வேடத்தில் அனுஷ்காவும் இப்படத்தில் இருக்கிறாராம்.

'சிங்கம் 2' படத்தில் வரும் ஹன்சிகா பாத்திரம் போல, 'சிங்கம் 3' படத்திலும் ஒரு பாத்திரம் இருக்கிறது. அப்பாத்திரத்தில் நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

ஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x