Published : 05 Apr 2015 09:50 AM
Last Updated : 05 Apr 2015 09:50 AM

நான் இன்னொரு உலகத்தில் வாழ்கிறேன்: ஏ.ஆர்.ரஹ்மான் நேர்காணல்

இசையமைப்பாளர் என்ற அடையாளத்தைத் தாண்டி ஒரு கதாசிரியராகவும் மாறி வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் எழுதியுள்ள கதை விரைவில் திரைப்படமாக உள்ளது. மும்பையைச் சேர்ந்த விஷ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி என்ற விளம்பரப் பட இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் அதை இயக்கவுள்ளார். இத்தகைய சூழலில் தனது அடுத்த கட்ட பயணம் குறித்து நம்மிடம் மனம் திறந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

கதை எழுதுவதற்கு நீங்கள் எந்த இயக்குநரிடம் இருந்தாவது உதவி பெற்றீர்களா?

இல்லை. நான் லாஸ் ஏஞ்சல்ஸ்ல் நகரில் இதற்காகப் படித்தேன். அதோடு நான் இசை யமைத்த படங்கள் மூலமாகப் பெற்ற அனுபவமும் இதற்கு கைகொடுத்துள்ளது.

படத்துக்கான கதை எழுதும் எண் ணம் உங்களுக்கு எப்படி வந்தது?

கடந்த 15 வருடங்களாக பாலி வுட், ஹாலிவுட், பிராட்வே, வெஸ்டர்ன் என பல வகையான தளங்களில் இசையமைத்துள்ளேன். அதையெல்லாம் பார்க்கும்போது நாமும் ஏன் இப்படி ஒரு படம் எடுக்க முடியாது எனத் தோன்றியது. கடந்த நான்கைந்து வருடங்களாக இசை வீடியோக்களை எடுத்து வருகிறேன். அப்போது நிறைய கற்றுக் கொண்டேன். கதை எழுதும் அதே நேரத்தில் இயக்குநர் ஆகவேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தேன். மூலக்கதையை மட்டும் நான் எழுதி திரைக்கதை எழுதுபவர்களை வைத்து விரிவாக்குகிறோம். நான் கதை எழுதும் படம் ஹாலிவுட் மியூசிக்கல் படங்கள் போல் இருக்காது. ஆனால் இசையைப் பற்றிய படமாக இருக்கும்.

உங்களது வாழ்க்கையைத்தான் கதையாக எழுதியிருக்கிறீர்களா?

இல்லை. எனது வாழ்க்கைக் கதை ‘ஜெய் ஹோ’ என்ற பெயரில் ஏற்கெனவே ஆவணப்படமாக தயாராகி இருக்கிறது. மறுபடியும் எனது வாழ்க்கை கதையை படமாக் கும் திட்டம் எதுவும் இல்லை.

இப்படத்தில் யாரெல்லாம் நடிக் கிறார்கள்?

அதற்கான தேர்வு நடந்து கொண் டிருக்கிறது. பெரும்பாலும் புதுமுக நடிகர்கள்தான் இப்படத்தில் நடிக்க வுள்ளார்கள். 18 வயது இளைஞர் ஒருவர் பிரதான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

‘மென்டல் மனதில்’ பாட்டை நீங் களும், மணிரத்னமும் இணைந்து எழுதியுள்ளீர்கள். பாடல் வரிகளில் உங்களது பங்களிப்பு என்ன?

அப்பாட்டின் பல்லவியை நானும், அவரும் இணைந்து எழுதினோம். சரணம் முழுவதும் மணி சார்தான் எழுதினார். இதில் நான் எழுதியது, அவர் எழுதியது என்றெல்லாம் இல்லை. இருவரும் சேர்ந்து சந்தோஷமாக எழுதினோம். இதற்கு முன்பு ‘என்றென்றும் புன்னகை’ பாடலும் அப்படி எழுதியதுதான்.

‘அலைபாயுதே’ தொடங்கி ‘ஓ காதல் கண்மணி’ வரை மணிரத்னத்துடன் இணைந்து நீங்கள் உருவாக்கிய பாடல்கள் எல்லாமே ஹிட் ஆகியுள்ளன. உங் களுக்குள் மறைந்திருக்கும் ரொமான் டிக் தன்மையின் வெளிப்பாடுதான் இது என்று வைத்துக்கொள்ளலாமா? உங்களைப் பார்க்கும்போது ரொமான்ட் டிக் தன்மையுடன் காணப்படு வதில்லையே?

அனைவருக்குள்ளும் ரெமாண் டிக் மனிதன் இருக்கிறான். அது ஓர் அற்புதமான விஷயம். எதற்காக பி.சுசீலா, எஸ்.ஜானகி, சித்ரா, ஆகியோர் பாடிய பழைய காதல் பாடல்களைக் கேட்கிறோம். காதல்தான் வாழ்க்கைக்கு அழகூட்டுகிறது. காதல்தான் வாழ்க்கைக்கான தூண்டுதலாக இருக்கிறது. காதல் எனது மனதுக்குள் இருக்கிறது.

சமூக வலைதளங்களில் நாட்டு நடப்புகளைப் பற்றி நீங்கள் அதிகம் கருத்து தெரிவிப்பதில்லையே?

எனக்கு கலை மற்றும் இசை பற்றி மட்டும்தான் தெரியும். நான் இன்னொரு உலகத்தில் வாழ்கிறேன். இசை மூலமாக மக்களுக்கும் அவ் வப்போது மாற்று உலகை தரு கிறேன். மக்கள் என்னிடம் இருந்து அதை மட்டும்தான் எதிர்பார்க்கிறார் கள். நான் செய்தித்தாள்களே படிப் பதில்லை. இன்றைய செய்தித்தாள் களில் வெறும் குற்றப் பின்னணி செய்திகள் மட்டுமே வருகின்றன. அதைப் பார்க்கும்போது மன அழுத்தம் அதிகமாகிறது.

ஆனால், ஒரு பிரபலம் சொன்னால் மக்கள் கேட்பார்கள் என்ற வகையில் உங்களுக்கு கடமை இருக்கிறதே?

எனக்கு அந்தளவுக்கு சக்தி யில்லை. இசையமைக்க மட்டுமே எனக்கு சக்தி இருக்கிறது. என்னு டைய ட்விட்டர் தளத்தில் இசையைப் பற்றி ட்வீட் செய்வதற்கு மட்டுமே நேரம் இருக்கிறது. இந்தியா ஒரு சிக்கலான தேசம், நாம் ஏதாவது கருத்து சொன்னால் தவறாக புரிந்து கொள்வார்கள். நிறைய மக்கள் நான் சொல்லவரும் கருத்துகளை சரியாக புரிந்து கொள்ளமாட்டார்கள். மக்க ளுக்கு என்ன பிடிக்குதோ அதைப் பற்றி மட்டும் ட்வீட் செய்கிறேன். எனக்கும் அதுதான் பிடித்திருக்கிறது.

திருக்குறள், பாரதியார் பாடல்கள் முதலான தொகுப்புகளை இன்னமும் உங்களிடம் இருந்து முழுமையாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்களே ரசிகர்கள்? எப்போது எல்லாம் அமையும்?

எனது பள்ளியில் அதற்கான திட்டங்கள் எல்லாம் இருக்கிறது. அதற்காக தான் எனது மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். அதை பண்ணும் போது மொத்த உலகமும் கவனிப்பார்கள். அது எனது பள்ளி மாணவர்கள் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாக பார்க்கிறேன். அதை செய்யும்போது மொத்த உலகமும் அதைக் கேட்க வேண்டும். அதைப் போல நிறைய திட்டங்கள் இருக்கிறது. மாணவர்கள் தயாரான உடன் நடக்கும்.

‘வந்தே மாதரம்’ ஆல்பம் போல மீண்டும் ஒரு இசை ஆல்பம் உருவாக்கும் திட்டம் இருக்கிறதா?

‘வந்தே மாதரம்’ ஆல்பத்துக்கு கிடைத்த வரவேற்பு மிகப்பெரியது. அதை முறியடிக்கவே முடியாது.

இந்தி, தமிழில் நீங்கள் போட்ட பாடல் களை ஹாலிவுட் படங்களில் பயன் படுத்தும்போது அங்கிருக்கும் ரசிகர்கள் அதை எப்படி வரவேற்கிறார்கள்?

‘மில்லியன் டாலர் ஆர்ம்’ படத்தில் ‘திறக்காத காட்டுக்குள்ளே’ பாடலை உபயோகப்படுத்தியது அங் குள்ளவர்களின் விருப்பப்படிதான். வரும் காலத்தில் தேவைப்பட்டால் இங்கு போட்ட பாடல்களை ஹாலிவுட்டில் பயன்படுத்துவேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x