Published : 05 Mar 2015 02:23 PM
Last Updated : 05 Mar 2015 02:23 PM
உதயநிதி ஸ்டாலினுடன் எமி ஜாக்சன் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பின்போது, விபத்துக்குள்ளான எமியை நடிகர் கருணாகரன் சாதுர்யமாக காப்பாற்றினார்.
உதயநிதி ஸ்டாலினுடன் எமி ஜாக்சன், நடிகர் கருணாகரன் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் காட்சிகள் கேரளாவில் எடுக்கப்பட்டன. இந்த நிலையில் ஒரு பைக்கிள் உதயநிதி ஸ்டாலினும் கருணாகரனும் மற்றொரு பைக்கில் எமி செல்லும் காட்சிகள் படமாக்கப்பட்டன. செங்குத்தான மலையோரத்தில் காட்சிகள் எடுக்கப்பட்டபோது, எமி ஜாக்சனின் வண்டி தடுமாறி மலையிலிருந்து சறுக்கி விழச் சென்றது.
அப்போது உடனடியாக பைக்கிலிருந்து இறங்கிய கருணாகரன், மலையிலிருந்து கீழே விழ இருந்த எமியை காப்பாற்றினார். இது குறித்து எமி ஜாக்சனும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் எமி சற்று பதற்றமடைந்தார். இருப்பினும் சிறுது நேரத்தில் படப்பிடிப்பு தொடங்கி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. படப்பிடிப்பை அடுத்து எமி, அவர் இந்தியில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றார்.
இதனிடையே, எமியை கருணாகரன் காப்பாற்றியதை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், "கருணாகரன், உண்மையான ஹீரோ. எமியை காப்பாற்றினார்" என குறிப்பிட்டுள்ளதோடு, என் கடமையைத் தானே செஞ்சேன் என கிண்டலாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT