Published : 27 Feb 2015 12:42 PM
Last Updated : 27 Feb 2015 12:42 PM
'பீகே' ரீமேக்கில் நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர்கான், சஞ்சய் தத், அனுஷ்கா ஷர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பீகே'. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஜெமினி லேப் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
இப்படத்தில் கமல் நடிக்கவிருக்கிறார் என்றும், ஜீத்து ஜோசப் இயக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளிவந்தவண்ணம் இருந்தன.
இந்நிலையில், "இந்த படம் தொடர்பாக தயாரிப்பாளர்களோடு முதற்கட்ட பேச்சு வார்த்தை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. என்னுடைய அடுத்தப் படம் எனது சொந்த தயாரிப்பில்தான் இருக்கும். அதற்காகதான் இப்போது மொரிஷியஸில் தங்கி திட்டமிடும் வேலைகளை செய்துவருகிறேன். யாரோ முடிவாக 'பீகே' ரீமேக் குறித்து கொளுத்திப் போட்டுள்ளனர்.
எனது கோரிக்கைகளுக்கு ஒத்துவந்தால் மட்டுமே அந்தப் படத்தின் ரீமேக்கில் நடிப்பது குறித்து யோசிக்க முடியும். இல்லையென்றால் வேறு யாரேனும் அதில் நடிப்பார்கள். ஆனால் நிச்சயமாக 'பீகே' மிகவும் நல்ல சுவாரசியமான படம். யார் நடித்தாலும் வெற்றி நிச்சயம். அந்தப் படத்தில் நடிக்க நிறைய நடிகர் போட்டிபோட்டு முன்வருவார்கள்" என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT