Published : 24 Feb 2015 03:04 PM
Last Updated : 24 Feb 2015 03:04 PM
நடிகர் விஜய்யை சந்தித்து பேசியது தொடர்பாக 'லிங்கா' படத்தின் திருச்சி, தஞ்சாவூர் விநியோகஸ்தர் சிங்காரவேலன் விளக்கம் அளித்துள்ளார்.
'லிங்கா' பட நஷ்ட ஈடு தொடர்பான சர்ச்சைகளில் இரண்டு நடிகர்கள்தான் ரஜினியை நஷ்ட ஈடு கொடுக்க கூடாது என்று தடுக்கிறார்கள் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.
ரஜினியை விஜய் தான் தடுக்கிறார் என்று செய்திகள் வெளியானது. மேலும், விஜய் தரப்பினர் இச்செய்திக்கு "விஜய்க்கும் 'லிங்கா' பிரச்சினைக்கும் சம்பந்தமில்லை" என்று மறுத்தார்கள்.
திடீரென்று சிங்காரவேலன் விஜய்யை சந்தித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து விஜய் தான் விநியோகஸ்தர்கள் பின்னணியில் இருக்கிறார் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், விஜய்யை சந்தித்தது ஏன் என்று சிங்காரவேலனை தொடர்பு கொண்டு கேட்டபோது, "நான் விஜய் சாரை சந்தித்து உண்மை தான். ஏனென்றால் நாங்கள் எந்தொரு இடத்திலும் விஜய் சாரின் பெயரை உபயோகிக்கவில்லை. ஆனால், விஜய்யை லிங்கா பிரச்சினையில் முன்னிறுத்தி செய்திகளை வெளியிட்டார்கள். இதனால் விஜய் மிகுந்த மனவருத்தத்தில் இருக்கிறார் என்று அவரது செய்தி தொடர்பாளர் என்னிடம் தெரிவித்தார்.
உடனே, அவரை நேரில் சந்தித்து இதனை விளக்குவதாகவும் தெரிவித்தேன். அதற்கு 'புலி' படப்பிடிப்பு தளத்துக்கு வருமாறு கூறினார்கள், சென்றேன். அன்று தான் விஜய் 'புலி' குழுவினருக்கு விருந்தளித்தார்.
விஜய்யிடம் நாங்கள் எந்தொரு இடத்திலும் உங்களுக்கு பெயரை உபயோகப்படுத்தவில்லை. ஆனால், தவறான செய்திகளை வெளிவந்துவிட்டது என்று அவரிடம் கூறினேன். அவரும் சரி... பரவாயில்லை என்று கூறினார்.
விநியோகஸ்தர்களுக்கு மினிமம் கேரன்டி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய் மட்டுமே. அவரை முதன்முதலாக சந்தித்ததால் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அப்படத்தை என்னுடைய வாட்ஸ்-அப் படமாக வைத்தது தவறு. அதை வைத்துக் கொண்டு மீண்டும் தவறாக எழுதுகிறார்கள்" என்றார் சிங்காரவேலன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT