Published : 26 Feb 2015 08:22 AM
Last Updated : 26 Feb 2015 08:22 AM
நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' திரைப்படத்தால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் அதற்கு நஷ்ட ஈடு கேட்டும் தமிழகத்தில் விநியோகஸ்தர்கள் போராட் டங்களை நடத்தினர்.
இந்த கோரிக்கையை லிங்கா திரைப்பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் ரஜினி ஆகியோர் ஏற்காததால் அவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ராக்லைன் வெங்கடேஷ், கடந்த 20-ம் தேதி பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “லிங்கா படம் விவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் பெயருக்கு களங்கம் விளைவிக்கவும் எனது பெயருக்கும், நிறுவனத் துக்கும் நெருக்கடி கொடுத்தும் வருகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் நடைபெறும் போராட்டம், ஆர்ப்பாட்டம், தரக் குறைவான விமர்சனம், ஊடகங் களுக்கு பேட்டி கொடுப்பது உள்ளிட்ட அனைத்துக்கும் தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தார்.
மனுவை நேற்று முன்தினம் விசாரித்த பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்ற நீதிபதி சர்வோதயா ஷெட்டிகா, “ரஜினி, ராக்லைன் வெங்கடேஷ், லிங்கா திரைப்படம் தொடர் பாக விமர்சனம் செய்யவோ, போராட்டம் நடத்தவோ, பேட்டிக் கொடுக்கவோ கூடாது. நீதிமன்ற உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சம்பந்தப்பட்ட விநியோக தஸ்கர்கள் மார்ச் 23-ம் தேதிக் குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT