Last Updated : 03 Feb, 2015 03:24 PM

 

Published : 03 Feb 2015 03:24 PM
Last Updated : 03 Feb 2015 03:24 PM

முதன்முறையாக கார்த்தியுடன் இணைகிறார் விவேக்

கோகுல் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள 'காஷ்மோரா' படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்கிறார் நடிகர் விவேக்.

முத்தையா இயக்கத்தில் 'கொம்பன்' படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதனைத் தொடர்ந்து நாகார்ஜுனுடன் ஒரு தெலுங்கு படம் மற்றும் 'காஷ்மோரா', லுங்குசாமி இயக்கும் படம் என தேதிகள் ஒதுக்கி கொடுத்திருக்கிறார்.

இப்படங்களில் முதலவதாக 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இயக்குநர் கோகுல் இயக்கும் 'காஷ்மோரா' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. பிப்ரவரி 16-ம் தேதி சென்னையில் தொடங்கவிருக்கும் படப்பிடிப்பில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா மற்றும் விவேக் ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள்.

'காஷ்மோரா' படத்தின் மூலம் மீண்டும் காமெடியனாக களம் இறங்கவிருக்கிறார் வடிவேலு என்று செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.

தற்போது இப்படத்தில் முதன்முறையாக கார்த்தியுடன் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகர் விவேக்.

கார்த்தி நடிப்பில் வெளியான படங்களின் பட்ஜெட்டை ஒப்பிடும்போது 'காஷ்மோரா' படத்தின் பட்ஜெட் அதிகம் என்கிறது படக்குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x