Published : 09 Jan 2015 06:23 PM
Last Updated : 09 Jan 2015 06:23 PM
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்த 'ஐ' திரைப்படம் மீதான இடைக்காலத் தடையை நீக்கி, சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ல் 'ஐ' படம் வெளியாவது உறுதியாகிறது.
பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற பி.வி.பி நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய கடன் தொகையை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் கொடுக்கவில்லை. இதனால், அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 'ஐ' படத்தை மூன்று வாரங்களுக்கு வெளியிட இடைக்காலத் தடை விதித்தார். ஜனவரி 30க்குள் ஆஸ்கர் ரவிச்சந்திரன் பதில் அளிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.
இந்த நிலையில், தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் பி.வி.பி நிறுவனத்தைச் சார்ந்த அரசுவுக்கு தர வேண்டிய 17 கோடி கடனை கொடுத்துவிட்டதால், அரசு தனது வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, 'ஐ' திரைப்படம் மீதான இடைக்காலத் தடையை நீக்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT