Published : 25 Dec 2014 02:37 PM
Last Updated : 25 Dec 2014 02:37 PM
'இயக்குநர் சிகரம்' என்று அழைக்கப்படும் கே.பாலசந்தரின் மறைவிற்கு இந்திய திரையுலகில் இருந்து பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வந்தார்கள்.
தூம் 3' படத்தை விளம்பரப்படுத்த சென்னை வந்த போது, இயக்குநர் பாலசந்தரைப் பார்த்து கலந்துரையாடினார் ஆமிர்கான். அப்போது கே.பாலசந்தர் 'தூம் 3' படத்திற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
கே.பாலசந்தரின் மறைவிற்கு ஆமிர்கான் தனது ஆழ்ந்த இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். "கே.பாலசந்தர் 23ம் தேதி மறைந்து விட்டார். இந்திய சினிமாவிற்கு ஒரு சோகமான தினம். சினிமாவிற்கு அவரது பங்களிப்பு அபரிமிதமானது. அவர் ஒரு எளிமையான மனிதர்.
எனது 25 வருட திரையுலக வாழ்வில், கே.பாலசந்தருடன் கழித்த மாலை பொழுது மறக்க முடியாது. அவர் என்னிடன் இயல்பாக பழகிய விதமும், அவருடன் பழகிய நினைவுகள் எப்போதும் என்னுடன் இருக்கும். அவரை பிரிந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். " என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT