Published : 24 Dec 2014 09:51 AM
Last Updated : 24 Dec 2014 09:51 AM
தனது குறும்படத்தின் கதையை காப்பியடித்து, ‘கத்தி’ படத்தை எடுத்துள்ளதாக தஞ்சை நீதிமன்றத் தில் குறும்பட இயக்குநர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகர் விஜய் உள்ளிட் டோருக்கு தஞ்சை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு.ராஜசேகர். குறும்பட இயக்குநரான இவர், "நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படத்தின் கதை, விவசாயிகளின் நிலை, அவர்கள் தற்கொலை செய்யும் அவலம் குறித்து எடுக்கப்பட்ட தன்னுடைய ‘தாகபூமி’ என்ற குறும்படத்தின் கதை என்று கூறியும், கத்தி படத்தை தியேட்டர்களில் திரையிடுவதை உடனே நிறுத்த வேண்டும். மற்ற மொழிகளில் ரீமேக், டப்பிங் செய்யக் கூடாது. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். பட வசூலில் எனக்கு ஒரு பங்கும், இழப்பீடும் வழங்க வேண்டும்" என்று கோரி ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய், லைக்கா படத் தயாரிப்பு நிறு வனத்தின் கருணாகரன், சுபாஷ்கரன், கேமராமேன் ஜார்ஜ் சி.வில்லியம் ஆகியோர் மீது தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நேற்று ஏற்றுக் கொண்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முகமதுஅலி, படத்துக்கு தடை கோரும் விசாரணைக்காக ஏ.ஆர்.முருக தாஸ், கருணாகரன், சுபாஷ்கரன் ஆகியோர் ஜன. 7-ம் தேதியும், இழப்பீடு கோரும் விசாரணைக்காக ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் உள்ளிட்ட 5 பேரும் ஜன.23-ம் தேதியும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT