Published : 11 Dec 2014 09:16 AM
Last Updated : 11 Dec 2014 09:16 AM
‘லிங்கா’ படத்தை வெற்றிபெறச் செய்வதற்காக ரஜினி மன்ற முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார்கள் சத்யநாராயணாவும் சுதாகரும்.
‘ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12-ல் ரிலீஸ் ஆகும் ‘லிங்கா’ படத்தை வெற்றிபெறச் செய்வதற்காக, ரஜினி மன்றங்களை முன்பு கவனித்து வந்த சத்யநாராயணாவும் இப்போ தைய பொறுப்பாளர் சுதாகரும் ரஜினி மன்ற நிர்வாகிகளை சென்னைக்கே அழைத்து ஆலோசனை நடத்தி இருக் கிறார்கள்.
ரஜினிகாந்த் மன்றப் பொறுப் பாளர்கள் மற்றும் மன்றங் களைவிட்டு ஒதுங்கி இருக்கும் முன்னாள் பொறுப்பாளர்களிடமும் ‘லிங்கா’வை வெற்றிப் படமாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்று சத்யநாராயணாவும் சுதா கரும் பேசியிருக்கிறார்கள்.
தலைமையிலிருந்து அழைத்துப் பேசியிருப்பதால், கட் -அவுட்கள், தோரணங்கள், ரசிகர் மன்றக் காட்சிகள் என பழைய உற்சாகத்துக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய சிவகங்கை மாவட்ட ரஜினிமன்ற தலைமைப் பொறுப் பாளர் ஜே.பி.ரவி கூறியதாவது, “சத்யநாராயணன் மற்றும் சுதாகரிடம் பேசிய அனைத்து ஊர்களையும் சேர்ந்த மன்ற பொறுப்பாளர்கள், ‘தலைவர் எங்களைச் சந்தித்துப் பேசி வெகுநாட்களாகிவிட்டது. எனவே அவர் எங்களைச் சந்திக்க வேண்டும்’ என்ற கருத்தை வலியுறுத்தினார்கள். ரிலீஸுக்குப் பிறகு ரஜினி ரசிகர்களை சந்தித்துப் பேசவிருக்கிறார். ஏற்கெனவே, ‘விருப்பமிருந்தால் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் விருப்பமில்லாவிட்டால் நற்பணி இயக்கம் தொடங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நாங்கள் எழுதியே கொடுத்திருக்கிறோம்.
ஆனால், இப்போதிருக்கிற சூழலில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதுதான் 32 மாவட்ட பொறுப்பாளர் களின் ஒட்டுமொத்த கோரிக்கை. ரஜினி எங்களைச் சந்திக்கும்போது இந்தக் கோரிக்கைக்கு அழுத்தம் கொடுப்போம்.
இந்த சந்திப்பில் ’லிங்கா’ படத்தை வெற்றி பெற வைக்கும் நோக்கத்தில் தலைமை நிர்வாகி களின் பேச்சும், ஆலோசனையும் அமைந் திருந்தது.’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT