Published : 01 Jul 2017 10:20 AM
Last Updated : 01 Jul 2017 10:20 AM
‘‘திரைப்படக் கதாநாயகியான பிறகு, மேடை நாடகத்தில் நடிக்க நேரம் கிடைப்பதில்லை. அந்த வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும், ‘சூது கவ்வும்’, ‘காக்கா முட்டை’, ‘தளபதி’, ‘ரோஜா’ போன்ற திரைப்படங்களை கலையுலகுக்கு தந்த தமிழ் திரையுலகில் நானும் ஒரு நாயகியாக நடிப்பது பெருமையாக, பெருமிதமாக மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்று பேசத் தொடங்கினார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
‘இவன் தந்திரன்’ மூலம் தமிழில் நாயகி யாக அறிமுகமாகிறார். அதைத் தொடர்ந்து ‘விக்ரம் வேதா’, ‘ரிச்சி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவரிடம் பேசியதில் இருந்து..
நீங்களோ ராணுவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். திரைப்படத்தில் நடிக்க எப்படி அனுமதித்தார்கள்?
ராணுவக் குடும்பம் என்றால் கண்டிப் பானவர்கள், பெரிய மீசை, வீட்டில் துப்பாக்கி, பைப்பில் புகை பிடிப்பார்கள் என்று, சினிமா பார்த்து பலரும் தப்புத் தப்பாக நினைக்கிறார்கள். நான் சந்தித்த திலேயே மிகவும் பிரியமான, அன்பான நபர் என் அப்பாதான்!
நான் சினிமாவில் நடிக்கப்போறேன் என்றதும், எல்லா பெற்றோர்போல அவர் களுக்கும் கவலை இருந்தது. ‘நல்ல வேலையைவிட்டுப் போகிறாளே, சினிமா பாதுகாப்பாக இருக்குமா?’ என்று யோசித் தார்கள். நடிப்பது என் விருப்பம். இதைச் செய்யாவிட்டால், மனம் திருப்திப்படாது என்பதால், நான் முடிவை மாற்றிக்கொள்ள வில்லை. அவர்களிடம் பேசி சமாதானம் செய்தேன். பிறகு ஒப்புக்கொண்டார்கள்.
மேடை நாடகத்தில் நடித்த நேரத்தில், சினிமா வாய்ப்பு வந்தபோது என்ன நினைத் தீர்கள்?
நாடகம் மீதுதான் எனக்கு ஈடுபாடு அதிகம். முழுநேர நாடக நடிகை ஆகும் விருப்பமும் இருந்தது. சினிமாவில் நடிக்கவேண்டும் என்று நினைத்ததே இல்லை. சினிமா வாய்ப்பு வந்தபோது நான் நம்பவே இல்லை. வந்து பேசுபவர்கள் உண்மையிலேயே சினிமாக்காரர்கள்தானா, இல்லை விளையாடுகிறார்களா என்றெல் லாம்கூட சந்தேகப்பட்டேன்.
சினிமா நடிப்புக்கு மேடை நாடக நடிப்பு உறுதுணையாக இருக்கிறதா?
நாடகங்களில் 4 ஆண்டுகள் நடித்துள் ளேன். விளம்பரங்களிலும் நடித்துள்ளேன். நாடகம் நடிப்பு சார்ந்தது மட்டுமே. அங்கு நான் நாயகி அல்ல. ஒரு நடிகை மட்டுமே. அங்கு கவர்ச்சி போன்ற விஷயங்கள் கிடையாது. அதனால் நடிப்பில் அதிக கவனம் செலுத்தினேன். கடுமையாக உழைத்தேன். என்னை மேம்படுத்திக் கொண்டேன். நாடகம் முடிந்த பிறகு, நாங்களே எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிட்டுதான் கிளம்புவோம். ஒரு நடிகராக இருக்க நாடகம் கற்றுத்தரும். கடுமையாக உழைக்கக் கற்றுத்தரும். அப்படி ஒரு பின்னணியில் இருந்து வந்ததால், நடிகையாக ஓரளவு நான் தயாராகியிருப்பதாகவே கருதுகிறேன். நாடகமோ, சினிமாவோ நடிப்பு மட்டுமே பிரதானம்; நாயகி, கவர்ச்சி என்பதெல்லாம் அல்ல. இது என் மனதில் நன்கு பதிந்திருக்கிறது.
நாடகங்களில் 4 ஆண்டுகள் நடித்துள் ளேன். விளம்பரங்களிலும் நடித்துள்ளேன். நாடகம் நடிப்பு சார்ந்தது மட்டுமே. அங்கு நான் நாயகி அல்ல. ஒரு நடிகை மட்டுமே. அங்கு கவர்ச்சி போன்ற விஷயங்கள் கிடையாது. அதனால் நடிப்பில் அதிக கவனம் செலுத்தினேன். கடுமையாக உழைத்தேன். என்னை மேம்படுத்திக் கொண்டேன். நாடகம் முடிந்த பிறகு, நாங்களே எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிட்டுதான் கிளம்புவோம். ஒரு நடிகராக இருக்க நாடகம் கற்றுத்தரும். கடுமையாக உழைக்கக் கற்றுத்தரும். அப்படி ஒரு பின்னணியில் இருந்து வந்ததால், நடிகையாக ஓரளவு நான் தயாராகியிருப்பதாகவே கருதுகிறேன். நாடகமோ, சினிமாவோ நடிப்பு மட்டுமே பிரதானம்; நாயகி, கவர்ச்சி என்பதெல்லாம் அல்ல. இது என் மனதில் நன்கு பதிந்திருக்கிறது.
சினிமாவில் முதல் காட்சியில் நடித்து முடித்தவுடன், மானிட்டரில் பார்த்த அனுபவம்..
திகிலாக இருந்தது. முதல் ஷாட்டில் விறைப்பாக இருந்தேன். வித்தியாசமாக உணர்ந்தேன். பலரும் என்னை வேடிக்கை பார்த்தனர். கேமரா எங்கு இருக்கிறது, என்ன கோணம் என்றெல்லாம் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.
மலையாளப் படத்தில்தான் என் முதல் ஷாட் அமைந்தது. காரில் இருந்து இறங்கி நடந்துசென்று ஒரு இடத்தில் நிற்க வேண்டும். அதற்கே 30 டேக் ஆனது. முதலில் சரியாக வராமல், போகப் போக அதைப் பற்றியே யோசிக்க ஆரம்பித்ததில் நிறைய டேக் வாங்கிவிட்டேன். இப்போது அப்படி இல்லை.
‘இவன் தந்திரன்’ படத்தை தொடர்ந்து மாதவன், நிவின் பாலி எனப் பெண்களுக்குப் பிடித்த நாயகர்களோடு நடித்த அனுபவம்?
படங்களில் நடிப்பதற்கு முன்பே நிவின் பாலி, மாதவன் ஆகியோரது மிகப்பெரிய ரசிகை நான். ‘ப்ரேமம்’ படத்துக்குப் பிறகு நிவினைப் பிடிக்காத பெண் இந்தியாவிலேயே கிடையாது. மாதவனை 90-களில் இருந்து ரசித்து வருகிறோம். அவர்களோடு நடிக்கும்போது, நமக்குள் இருக்கிற ‘ரசிகை’ முன்னுக்கு வரப் பார்க்கும். அதை பின்னுக்குத் தள்ளி, ‘நடிகை’யை முன்னுக்கு கொண்டுவருவதில்தான் நம் சாமர்த்தியம் இருக்கிறது.
அவர்கள் பெரிய நடிகர்களாக இருந்தும் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். இது அவர்களிடம் மிகவும் பிடித்த விஷயம். விஜய்சேதுபதியும் அப்படித் தான். ரசிகர் கூட்டம் கூடிவிட்டால் அவரே போய் பார்த்து விசாரித்து கட்டியணைத்துவிட்டு வருவார். சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வார். அதுதான் ஒரு நட்சத்திரத்துக்குத் தேவை யான மிகப்பெரிய குணம் என்று நினைக்கிறேன்.
நீங்கள் நாயகியாக நடித்த ‘யு-டர்ன்’ கன்னடப் படம், மலையாளத்தில் ‘கேர்ஃபுல்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. அப்படத்தின் தமிழ் ரீமேக்குக்கான பேச்சுவார்த்தை நீண்ட காலமாக நடக்கிறதே..
வெறுமனே மொழியை மட்டும் மாற்றி, ஒரே படத்தை திரும்பத் திரும்ப எடுப்பது வீண். அதில் என்ன புதுமை இருக்கிறது? அதிலும், ‘யு-டர்ன்’ போன்ற ஒரு த்ரில்லர் படம் மறு ஆக்கத்தில் அதன் புது மையை இழந்துவிடு கிறது. அந்தப் படங் களை ஏற்கெனவே பலர் பார்த்திருப்பார்கள். அவர்களுக்கு அந்தப் படம் என்ன சுவாரசி யத்தைத் தந்துவிடும்? ஒருவேளை, அதில் புதிதாக ஒரு திருப்பம், புதிதான முடிவு, புதிய கதாபாத்திரங்கள் என்று சேர்த்தால் அர்த்தம் இருக்கிறது. ‘யு-டர்ன்’ தமிழில் வருவதாக இருந்தால் சமந்தா நடிக்கலாம். பொருத்தமானவர். நன்றாகவும் இருக்கும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT