Last Updated : 27 Nov, 2014 04:45 PM

 

Published : 27 Nov 2014 04:45 PM
Last Updated : 27 Nov 2014 04:45 PM

காப்பி விவகாரம்: ரவி கே.சந்திரனுக்கு யான் தயாரிப்பாளர்கள் நோட்டீஸ்

'யான்' திரைப்படம் 'மிட்நைட் எக்ஸ்பிரஸ்' என்ற ஹாலிவுட் படத்தின் காப்பி என்பதால் 'யான்' திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் இயக்குநர் ரவி கே சந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

சமீபத்தில் வெளியாகி கடுமையான விமர்சனத்துக்கு ஆளான திரைப்படம் 'யான்'. ஜீவா நாயகனாக நடித்திருந்த இத்திரைப்படத்தை, புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இயக்கியிருந்தார். இது அவரது இயக்கத்தில் முதல் படமும் கூட.

'யான்' படத்தின் கதையும், பல காட்சிகளும், 1978-ஆம் ஆண்டு வெளியான 'மிட்நைட் எக்ஸ்பிரஸ்' என்ற திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி என சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. இரு படத்தின் காட்சிகளையும் ஒப்பிட்டு வீடியோக்களும் பரவ ஆரம்பித்தன.

இது குறித்து பேசிய தயாரிப்பாளர் எல்ரெட் குமார், "இணையத்தில் பிரபலமான வீடியோவை பார்த்த பின்பு தான் எங்களுக்கு அவர் காப்பியடித்தது புரிந்தது. இதனால் நாங்கள் அதிர்ச்சியுற்றோம். ஏனென்றால், இது உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுத்தப்பட்ட அசல் கதை என்று ரவி கே சந்திரன் எங்களிடம் கூறியிருந்தார்.

'மிட்நைட் எக்ஸ்பிரஸ்' படத்தின் தயாரிப்பாளர்கள் எங்கள் மேல் வழக்கு தொடுக்கலாம் என்ற அஞ்சினோம். அவர்கள் தொடங்கும் முன்பு, படத்தின் கதை தனதுதான் என்று கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை மீறியதற்காக, ரவி கே சந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இதற்கு முழு பொறுப்பு அவர் மட்டுமே. நாங்கல் அல்ல" என்று கூறினார்.

ஆனால் ரவி கே சந்திரன் தரப்பிலிருந்து இதுவரை பதில் ஏதும் பெறப்படவில்லை என்று குமார் தெரிவித்தார். ரவி கே சந்திரனையும் தற்சமயம் தொடர்பு கொள்ள இயலவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x