Published : 03 Dec 2013 09:50 AM
Last Updated : 03 Dec 2013 09:50 AM

நவீன சரஸ்வதி சபதம் படத்தில் அவதூறு காட்சிகள் :பாரத் மக்கள் கட்சி புகார்

'நவீன சரஸ்வதி சபதம்' படத்தில் அவதூறு காட்சிகள் இடம் பெற்றிருப்பதால், அதனை நீக்கக் கோரி பாரத் மக்கள் காட்சி போலீசில் புகார்.

ஜெய், சத்யன், வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில், தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் 'நவீன சரஸ்வதி சபதம்'. சந்துரு இயக்கியுள்ளார்.

இப்படத்தில் இந்து மதத்தினை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக, காவல் ஆணையர் அலுவலகத்தில் பாரத் மக்கள் கட்சி அமைப்பினர் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில், " 'நவீன சரஸ்வதி சபதம்' என்ற திரைப்படம் அண்மையில் வெளியானது. இப்படத்தில் சிவபெருமான், பார்வதி, விநாயகர் ஆகிய இந்து கடவுள்களை கேலி, கிண்டல் செய்யும் வகையில் பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

மேலும் இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையிலும் பல காட்சிகள் உள்ளன. இக்காட்சிகளைப் பார்க்கும் இந்துக்களின் மனது புண்படுகிறது. இதுபோன்ற காட்சிகளுக்கு திரைப்பட தணிக்கை துறை அனுமதியளித்தது கண்டிக்கத்தக்கதாகும்.

எனவே அப்படத்தில் இருக்கும் இந்து மதம் குறித்து அவதூறான காட்சிகளை நீக்க வேண்டும். இதற்குக் காரணமான திரைப்படத்தின் இயக்குநர், நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x