Published : 08 Feb 2017 10:15 AM
Last Updated : 08 Feb 2017 10:15 AM
கமல்ஹாசன்: பிப்ரவரி 7. அதே நாளில் சில வருடங்களுக்கு முன்னால் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக ஒரு கலைஞனுக்கு தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஆதரவளித்தார்கள் என்பதைக் கண்டுகொண்டேன். தமிழ்நாடு உறங்கச்செல்லட்டும். நமக்கு முன்னால் அவர்கள் விழித்துக்கொள்வார்கள்.
சித்தார்த்: மெரினாவில் ஓபிஎஸ். தமிழக அரசியல் உண்மையான 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' மற்றும் 'ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்' சீரியல்களைப் போலவே இருக்கிறது.
ஆர்யா: சரியான நேரத்தில் துணிவான, சிறந்த பேச்சு ஓபிஎஸ் சார். பாராட்டுகள்.
அருள்நிதி: தைரியமான பேச்சு. தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையை அறியச் செய்து, அவர்களிடத்தில் நேர்மையாக நடந்திருக்கிறார் ஓபிஎஸ்.
இமான்: இதுதான் சிறந்த வழி. தமிழ்நாட்டு அரசியலில் நம்பிக்கையை துளிர்விட்டிருக்கிறது. சரியான இடத்தில் இருந்து, சரியான நேரத்தில், சரியான பேச்சு! நீதி நிலை நாட்டப்பட்டிருக்கிறது. #OPS
ஆதிக் ரவிச்சந்திரன்: 'கண்ணா சிங்கம் சிங்கிளாதான் வரும்!' #OPS வீரப்பேச்சு. எங்களின் இதயத்தை வென்றுவிட்டீர்கள். ரகசியமாகப் புதைந்துகிடக்கும் உண்மைகளையும் வெளிக்கொண்டு வாருங்கள். நாங்கள் காத்திருக்கிறோம். #OPSsirappu
தயா அழகிரி: ஓபிஎஸ் இத்தனையையும் புதைத்து வைத்திருந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் ஆகச் சிறப்பு முதல்வரே!எப்போது வேண்டுமானாலும் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்படாலாம். ஆனாலும் துணிவாகப் பேசியிருக்கிறார். #OPS #Modi தமிழ்நாட்டில் மீண்டும் ஒருமுறை மோடி அலை.
குஷ்பு: திகைப்புடன் காத்திருக்கிறேன். ஓபிஎஸ் மவுனத்தைக் கலைப்பார் என்று நம்புகிறோம். போராட்டமா இல்லை வெறும் அஞ்சலியா? நாடகத்தின் முடிச்சு முழுமையாக அவிழட்டும். ஒரு தலைவர் உதயமாகிறார்.
எஸ்.வி.சேகர்: 'அதிமுகவில் ஓர் ஆண் மகன்'. ஒரு பொருளாளர் நீக்கத்தில் பிறந்ததுதான் ADMK எனும் கட்சி. வரலாறு திரும்புகிறதா?!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT