Published : 19 Mar 2014 09:10 AM
Last Updated : 19 Mar 2014 09:10 AM
கிரிக்கெட் மைதானத்திற்குள் பணம் பறப்பது, ஸ்டெம்புகளை பணம் உடைப்பது, கை நிறைய பணம் வைத்துக் கொண்டு ஒரு வீரர் கேட்சை விடுவது என்று ‘ஆடாம ஜெயிச்சோமடா’ படத்தின் விளம்பரங்களே வித்தியாசமாக இருக்கிறது. விளம்பரங்கள் மூலமே தன் படத்தை பேசவைத்த இப்படத்தின் இயக்குநர் பத்ரியை சந்தித்தோம்.
‘ஆடாம ஜெயிச்சோமடா’ படத்தின் விளம்பரங்கள் எல்லாம் கிரிக்கெட்டை மையப்படுத்தியே இருக்கே.. இதை வச்சு என்ன சொல்ல வர்றீங்க?
நான் நடக்காததை சொல்ல வரலை, நடந்ததை அப்படியேவும் சொல்ல வரலை. கிரிக்கெட்ல நிறைய பணப் பரிமாற்றங்கள் நடைபெறும். அப்படிப் பணப் பரிமாற்றம் நடக்கும்போது நிறைய தப்பு நடப்பதற்கும் வாய்ப் புள்ளது. பத்து தப்பு நடந்தா நமக்கு ரெண்டு தான் தெரியுது. ரெண்டு தப்பு தெரிஞ்ச உடனே, எல்லாரும் உஷாரா ஆயிடுறாங்க. ஆனா ரெண்டு வாரத்துல எல்லாத்தையும் மறந்துடு றாங்க. மறுபடியும் தப்பு நடந்துக் கிட்டு தான் இருக்கு. அதை காமெடியா சொல்ற படம் தான் ‘ஆடாம ஜெயிச்சோமடா’. ஒரு நல்ல விளையாட்டு இப்படி ஆயிடுச்சேங்கிற ஆதங்கத்தை காமெடியா சொல்லிருக்கேன்.
இந்த கதையை பண்றதுக்கு என்ன காரணம்?
‘தில்லு முல்லு’ ஷூட்டிங் நேரத்துல கிரிக்கெட் வீரர் சாந்த் அழுதுக்கிட்டு இருக்கிற மாதிரி விளம்பரம் ஒண்ணு போட்டோம். அதாவது சாந்த் அழுதுக்கிட்டு இருப்பார், இன்னொரு பக்கம் ‘மிர்ச்சி’ சிவா சிரிச்சிட்டு இருப் பாரு. மேலே ‘இந்த தில்லு முல்லு அழ வைக்கும். எங்க தில்லு முல்லு சிரிக்க வைக் கும்’னு எழுதியிருக்கும். அந்த விளம்பரத்துக்கு நல்ல ரீச் இருந்தது. நிறைய பேர் போன் பண்ணாங்க. ஒரு விளம்பரத் திற்கே இவ்வளவு பெரிய ரீச் அப்படின்னா, இதை ஏன் படமா பண்ணக்கூடாதுன்னு முடிவு பண்ணினேன்.
என்னோட நண்பர்கள்கிட்ட நிறைய விஷயங்கள் பேசினேன். பெட்டிங்னா என்ன, அது எப்படி நடக்குது? இப்படி நிறைய விஷயங்கள் சேகரிச்சேன். சேகரிச்ச விஷயங்கள் எல்லாத்தை யும் கோர்ந்து காமெடி மைதானத் தில் கிரிக்கெட் ஆடியிருக்கேன்.
நடிகர் சிவாவை வசனகர்த்தா சிவாவாக மாற்றியது ஏன்?
இந்தக் கதையை எழுதிட்டு, ‘மிர்ச்சி’ சிவாகிட்ட சொன்னேன். நல்ல கதை சார், நானே வசனம் எல்லாம் எழுதி தர்ரேன்னு சொல் லிட்டார். ‘கலகலப்பு’, ‘தில்லு முல்லு’ படங்கள் பண் ணும் போது, கொடுங்கல் வாங்கல் அப்படிங் கிறது இருக்கும்.
வசனங்கள்ல சிவாவோட பங்களிப்பு இருக்கும். சிவா, சந்தானம் இவங்களோட வசன பங்களிப்பு படங்களுக்கு ரொம்ப முக்கியமானது. ஷுட்டிங் ஸ்பாட்ல ஒரு சீனை படிச்சிட்டு இந்தளவிற்கு வசன பங்களிப்பு இருக்குன்னா, முழுப்படத்திற்கு வசன எழுதச் சொன்னா என்னன்னு யோசிச்சேன்.
இன்னொரு விஷயம், இது கிரிக்கெட் பத்தின கதை. கிரிக்கெட் பத்தி தெரிஞ்சிருக்கணும், சினிமா பற்றியும் தெரிஞ்சிருக்கணும், நகைச்சுவை உணர்வும் இருக்க ணும். இந்த மூணுமே சிவாகிட்ட இருக்கு. அதனால தான் இந்தப் படத்திற்கு வசனம் எழுத அவரு தான் சரியா இருப்பார்னு முடிவு பண்ணோம். சிவா எழுதிக் கொடுத்த வசனத்துல, கிட்ட தட்ட ஒரு சதவிகிதம்தான் மாத்தி யிருக்கேன். மற்றபடி அப்படியே எடுத்திருக்கேன்.
கிரிக்கெட்டில் பெட்டிங் கூடா துன்னு சொல்லி இருக்கீங்களா?
வேணும், வேண்டாம் அப்ப டிங்கிறதை எல்லாம் நான் சொல்லல. ஒன்ணே முக்கால் மணி நேரம் சிரிக்க வைச்சிட்டு, கடைசி 20 நிமிஷம் மெசேஜ் சொன்னா கூட யாரும் கேட்க தயாரா இல்ல. இது தப்பு, சரி அப்படிங்கிறது எல்லாருக்குமே தெரியுது. எல்லா படங்கள்லயும் தப்பு பண்ணவன் தோற்பான், தப்பு பண்ணாதவன் ஜெயிப்பாங்கிற விஷயம் இருக்கில்லை. அதே மாதிரி தான் இந்த படத்துலயும், பெட்டிங் பண்றவங்க ஒரு சின்ன விஷயத்தால தோத்துப் போயிடறாங்க. தப்பு பண்ணாத வனுக்கு பணம் கிடைக்குது.
படம் முழுவதும் கிரிக்கெட்னா பாக்குறவங்களுக்கு போர் அடிக்குமே?
ஒரு சாதராண மனுஷனோட வாழ்க்கைல கிரிக்கெட் அப்படிங் கிறது எவ்வளவு தூரம் இருக்கிறது. இப்ப இருக்குற வாழ்க்கைல 24 மணி நேரத்துல, 2 மணி நேரம் தான் அவனால கிரிக்கெட்டுக்கு செலவு பண்ண முடியுது. அதே மாதிரி இந்த கதையில அரை மணி நேரம் தான் கிரிக்கெட். மீதி எல்லாமே பொழுதுபோக்கு அம்சம் தான்.
காதல், காமெடி, பாடல்கள் இப்படி எல்லாமே கலந்து தான் சொல்லியிருக்கேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT