Last Updated : 04 Feb, 2017 06:59 PM

 

Published : 04 Feb 2017 06:59 PM
Last Updated : 04 Feb 2017 06:59 PM

இத்தகைய வாழ்க்கையை கனவிலும் நான் எதிர்பார்க்கவில்லை: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

நீங்கள் அளித்துள்ள இத்தகைய வாழ்க்கையை கனவிலும் நான் எதிர்பார்க்கவில்லை என்று சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

2012ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். 'மெரினா', 'எதிர் நீச்சல்', 'மான் கராத்தே', 'காக்கி சட்டை' என தொடங்கி 'ரெமோ' வரை நடித்து தனது திரையுலக வாழ்க்கையில் பல கட்டங்களை கடந்து விட்டார்.

அவர் திரையுலகுக்கு வந்து 5 ஆண்டுகள் ஆனதையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் சிறு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பது, "பிப்.3, 2012 என்னை வெள்ளித்திரையில் கண்டேன். நிறைய அனுபவங்களுடன் இந்த 5 அற்புதமான ஆண்டுகள்... நீங்கள் அளித்துள்ள இத்தகைய வாழ்க்கையை கனவிலும் நான் எதிர்பார்க்கவில்லை.

சகோதர சகோதரிகள், என் அனைத்து திரைப்படக்குழுவினர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், அனைத்து நட்சத்திரங்கள், ரசிகர்கள், ஊடகங்கள், பத்திரிகைகள், சினிமா நேயர்கள் ஆகியோர் எனக்கு அளித்த மிகப்பெரிய ஆதரவுக்கு எனது மிகப்பெரிய நன்றி!

பாண்டிராஜ் சாருக்கு எனது சிறப்பு நன்றி! அவர்தான் இந்த இனிய பயணத்தை தொடக்கி வைத்தவர். இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்பதை அறிவேன். நான் இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன், எப்போதும் கற்றுக் கொள்வதில் என் ஆர்வம் குறையாது.

பொழுதுபோக்கு படங்களை அளிப்பதில் என்னால் சிறப்பாக என்ன செய்ய முடியுமோ அதனை முயற்சி செய்வேன்" என்று தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x